இந்த 3 ராசிகளுக்கு கடனே இருக்காதாம்- அதிக யோகம் கொண்ட ராசிகள் யார் தெரியுமா?
மனிதன் எவ்வளவு தான் பணக்காரனாக இருந்தாலும், அவன் வாழ்நாளில் ஏதோ ஒரு சூழ்நிலையில் பிறரிடம் அல்லது வங்கியிலாவது கடன் வாங்கும் நிலை உருவாகும். ஆனால், ஜோதிடத்தில் ஒரு சில ராசிகளுக்கு கடன் வாங்குவதே பிடிக்காதாம்.
அவர்கள் எவ்வளவு இக்கட்டான சூழ்நிலையும் சமாளித்து முன்னேற்றம் அடைந்து விடுவார்களாம். அப்படியாக, வாழ்க்கையில் எந்த ராசிகள் கடனே வாங்காமல் நிறைந்த யோகத்துடன் வாழும் அமைப்பு கொண்டவர்கள் என்று பார்ப்போம்.
ரிஷபம்:
ரிஷப ராசிகளை பொறுத்த வரையில் எதையும் திட்டமிட்டு செய்யக்கூடியவர்கள். இவர்களுக்கு தேவை இல்லாத ஆடம்பர செலவுகளை செய்வது பிடிக்காத ஒன்று. மேலும், இவர்களுக்கு வாழ்க்கையில் தேவையான விஷயங்கள் வாங்க வேண்டும் என்று நினைத்து விட்டால் அதற்கான பணத்தை சேமித்த பிறகே வாங்குவார்கள். மேலும், இவர்களுக்கு கடன் வாங்கும் நிலை உருவானாலும் அதை வெகு விரைவில் அடைத்து விடுவார்கள்.
கடகம்:
கடக ராசி பொறுத்த வரையில் அவர்கள் டென்ஷன் இல்லாத வாழ்க்கையை வாழ விரும்புவார்கள். அதேப்போல், கணக்கு விஷயங்களில் இவர்கள் மிகவும் கவனமாகவும் பொறுப்போடும் செயல்படுவார்கள். இவர்களுக்கு இயற்கையாகவே எந்த ஒரு காரியம் செய்யவேண்டும் என்றாலும் கடன் வாங்காமல் செய்து முடித்திடும் யோகம் உண்டாகும்.
கும்பம்:
கும்ப ராசிக்காரர்கள் அறிவும் அனுபவமும் அதிகம் நிறைந்தவர்கள். இவர்கள் யாரையும் தொந்தரவு செய்யாமல் வாழவேண்டும் என்று நினைப்பவர்கள். அதேப்போல், கடன் வாங்கி ஒரு விஷயம் செய்யவேண்டும் என்றால் அந்த விஷயத்தை செய்யவேண்டாம் என்று நினைப்பவர்கள். மேலும், இவர்கள் கடன் வாங்கினாலும் அதை அடைக்கும் வரை இவர்களுக்கு தூக்கமே வராது. விரைவில் முடித்து விடுவார்கள்.
ஆன்மீகம்/ஜோதிடம் குறித்த தகவல்களை பெற IBC பக்தி வாட்ஸ் அப் குழுவில் இணைந்து கொள்ளுங்கள். |







