விருச்சிகத்தில் இருக்கும் சூரியன் புதன் செவ்வாய்- 3 ராசிகளுக்கு இனி கொண்டாட்டமாம்
ஜோதிடத்தில் அவ்வப்பொழுது நவக்கிரகங்கள் தங்களுடைய இடத்தை மாற்றிக் கொண்டே இருப்பார்கள். அந்த வகையில் 2025 நவம்பர் 16ஆம் தேதி விருச்சிக ராசியில் சூரிய பகவான் பெயர்ச்சியாக இருக்கிறார். அங்கு ஏற்கனவே புதன் மற்றும் செவ்வாய் பகவான் இருப்பதால் இந்த மூன்று கிரகங்களுடைய சேர்க்கை மிகப்பெரிய அளவில் தாக்கத்தை உருவாக்குகிறது.
இதனால் ஒரு சில ராசிகளுக்கு மனதில் தெளிவும் எதிர்பாராத அளவில் வெற்றியும் எதையும் சாதிக்கக்கூடிய நம்பிக்கையும் பிறக்கப் போகிறதாக சொல்கிறார்கள். அப்படியாக இந்த மூன்று கிரக சேர்க்கைகள் எந்த ராசியினருக்கு மிகப்பெரிய அதிர்ஷ்டத்தை கொடுக்கப் போகிறது என்று பார்ப்போம்.
விருச்சிகம்:
விருச்சிக ராசியினருக்கு இந்த கிரக சேர்க்கையானது அவர்கள் வாழ்க்கையில் எதையும் துணிந்து செய்யக்கூடிய ஒரு ஆற்றலை கொடுக்கப் போகிறது. இவர்கள் வாழ்க்கையில் சந்திக்கக்கூடிய துன்பங்களை சமாளித்துக் கொள்ளலாம் என்று ஒரு மன உறுதியோடு செயல்பட போகிறார்கள். வேலையில் இவர்களுக்கு பாராட்டுக்களும் உயர் பதவிகளும் விரைவில் கிடைக்கக்கூடிய பாக்கியம் பெற போகிறார்கள்.
கடகம்:
கடக ராசியினருக்கு இந்த கிரக சேர்க்கையானது அவர்களுடைய நீண்ட நாள் மன அழுத்தத்திலிருந்து விடுதலை பெறுவதற்கான ஒரு வழியை கொடுக்கப் போகிறது. இவர்களுக்கு தொழில் மற்றும் குடும்ப வாழ்க்கையில் பிரச்சனைகளை சந்தித்து கொண்டு இருந்தார்கள் என்றால் அதற்கான நல்ல தீர்வுகளை பெறப்போகிறார்கள். குழந்தைகள் இவர்களுக்கு நல்ல ஆறுதலாகவும் ஆதரவாகவும் இருக்கக் கூடிய ஒரு பொன்னான காலமாக இருக்கிறது.
மீனம்:
மீன ராசியினருக்கு இந்த கிரக சேர்க்கையானது அவர்களுடைய ஒரு விஷயத்தை துணிந்து செய்யக்கூடிய ஆற்றலை கொடுக்கப் போகிறது. சமுதாயத்திற்காக நிறைய உழைத்த மீன ராசியினருக்கு நிறைய உண்மைகள் புரிய வரக்கூடிய அற்புதமான காலமாகும். யாரிடம் எப்படி பழக வேண்டும் என்று இந்த கிரக சேர்க்கையானது இவர்களுக்கு மிகத் தெளிவாக உணர்த்தப் போகிறது. மனதில் இருந்த கவலைகளும் குழப்பங்களும் விலகி புதிய பயணத்தை தொடங்க போகிறார்கள்.
| ஆன்மீகம்/ஜோதிடம் குறித்த தகவல்களை பெற IBC பக்தி வாட்ஸ் அப் குழுவில் இணைந்து கொள்ளுங்கள். |