உருவாகும் புதாத்திய ராஜ யோகம்.., கட்டுக்கட்டாக பணம் பெறப்போகும் 3 ராசியினர்
By Yashini
சூரியன், மே 14, 2024 அன்று, மாலை 05:41 மணிக்கு ரிஷப ராசிக்கு மாறுகிறார்.
அதன் பிறகு, சரியான புத்தியைத் தரக்கூடிய புதன் கிரகம் மே 31ஆம் தேதியன்று, மதியம் 12:02 மணிக்கு ரிஷப ராசிக்குள் நுழைகிறது.
இப்படி ரிஷப ராசியில் சூரியனும் புதன்பகவானும் சேர்வதால் புதாத்திய யோகம் உண்டாகிறது.
இந்த புதாத்திய யோகம் குறிப்பிட்ட 3 ராசியினர் அதிர்ஷ்டத்தை பெறப்போகின்றனர்.
ரிஷபம்
- இந்த காலகட்டத்தில் மிகுந்த மனக்குழப்பத்துடன் இருப்பவர்களின் மனதில் நிம்மதி இருக்கும்.
- திருப்தி பிறக்கும்.
- சொந்த ஊரில் வசிக்கும் ரிஷப ராசியினருக்கு, இக்காலத்தில் மதிப்பு மரியாதை கூடும்.
- உங்கள் அலுவலகங்களில், அலுவலக அரசியலால் பிரச்னைகளைத் தொடர்ந்து அனுபவிப்பவர்களுக்கு இக்காலகட்டத்தில் சாதகமான விளைவுகள் வந்துசேரும்.
- திருமணம் கைகூடாத ரிஷப ராசியினருக்கு, இக்காலத்தில் வரன் கைகூடும்.
- கணவன் - மனைவி இடையே அந்நியோன்யம் அதிகரிக்கும்.
- பாசம் கூடும்.
- தொழில் முனைவோர்களுக்கு புதாத்திய ராஜயோகத்தால் புதிய வாடிக்கையாளர்கள் கிடைப்பார்கள்.
கடகம்
- இக்காலகட்டத்தில் இறை நம்பிக்கை மற்றும் இறைத்தொண்டுகளை அதிகம் செய்வீர்கள்.
- கடக ராசியினருக்கு வருவாய் முன்பிருந்ததைவிட சற்று அதிகரிக்கும்.
- மேலும் கடக ராசியினருக்கு இருந்த உளச்சோர்வு மற்றும் மனச்சோர்வு ஆகியவை நீங்கும்.
- வெளிநாடு செல்வதற்கு முயன்றால் இக்காலகட்டத்தில் அதற்கான வாய்ப்புகள் அமையும்.
- தொழிலை விரிவுசெய்ய நாடு முழுவதும் பயணம் செய்வீர்கள்.
- மிகுந்த சிரத்தையுடன் போட்டித் தேர்வுகளுக்குத் தயாராகும் மாணவர்கள் தேர்வில் தேர்ச்சி பெற்று வெல்வார்கள்.
சிம்மம்
- இந்த புதாத்திய ராஜயோகத்தால் வியாபாரம் செய்பவர்களுக்கு நல்ல லாபமான காலகட்டமாகும்.
- வணிகர்களுக்கு வருவாய் பெருகும்.
- அதிக லாபம் கிடைக்கும்.
- அதேசமயம், பணியில் இருப்பவர்களுக்கு சம்பள உயர்வு, பதவி உயர்வு கிடைக்க வாய்ப்புகள் உண்டு.
- அரசு வேலைக்கு முயற்சிக்கும் சிம்ம ராசியினருக்கு நல்ல வாய்ப்புகள் இக்கட்டத்தில் உருவாகும்.
ஆன்மீகம்/ஜோதிடம் குறித்த தகவல்களை பெற IBC பக்தி வாட்ஸ் அப் குழுவில் இணைந்து கொள்ளுங்கள். |