இந்த 3 விஷயங்களை செய்தால் வீடுகளில் உள்ள நெகட்டிவ் எனர்ஜிகளை விரட்டி விடலாம்
ஒரு மனிதனின் மனநிலை அவனுடைய வீடுகளில் இருந்து தொடங்குகிறது. சில சமயங்களில் வீட்டில் உள்ள நபர்களிடம் எந்த பிரச்சனை இல்லை என்றாலும் அந்த வீட்டை சுற்றி இருக்கக்கூடிய அதிர்வலைகள் அவனுக்கு நல்ல மற்றும் தீய தாக்கத்தை கொடுக்கிறது. அதாவது வீடுகளில் காரணமே இல்லாமல் சண்டை சச்சரவுகள் சூழ்ந்துவிடும்.
ஒரு இருட்டு நிலையாக மாறிவிடும். அதாவது நேரம் சரியில்லை என்கின்ற பொழுது எல்லோர் மனநிலையிலும் ஒரு பதட்டம் உண்டாகும். இதனால் வீடுகளில் ஒரு நெகட்டிவ் எனர்ஜிகள் உருவாகுவதை பார்க்க முடிகிறது.
எல்லோரும் மனதிலும் நல்ல சிந்தனைகளும் செயல்களும் இருந்தாலும் நேரம் சரியில்லாத காரணத்தினால் நெகட்டிவ் எனர்ஜிகள் சூழ்ந்து விடும் பொழுது அதிலிருந்து விடுதலை பெறுவதற்கு கட்டாயமாக சில விஷயங்களை பின்பற்றினால் நல்ல மாற்றம் உண்டாகும். அதைப் பற்றி பார்ப்போம்.

1. அதிகாலை மந்திரம் மற்றும் ஒலி:
பொதுவாக, மந்திரங்களுக்கு அதிக அளவில் சக்திகள் இருக்கிறது, ஆதலால் அதிகாலை நேரங்களில் வீட்டின் ஜன்னல் கதவுகளை திறந்து வைத்து தெய்வங்களுடைய மந்திரங்களை ஒலிக்க செய்ய வேண்டும்.
அவ்வாறு தொடர்ந்து நாம் செய்யும் பொழுது வீடுகளில் உள்ள நல்ல அதிர்வலைகள் உருவாகி நெகட்டிவ் எனர்ஜிகள் வெளியேறுகிறது. மேலும், அந்த மந்திர ஒலியை நாம் கேட்டுக் கொண்டு இருக்கின்ற பொழுது உடலிலும் மனரீதியாகவும் நாமும் நல்ல மாற்றங்களை உணரலாம்.
2. உப்பு நீர்க் கரைசல்:
நம்முடைய சாஸ்திரங்களிலும் அறிவியல் ரீதியாகவும் உப்பு என்பது நேர்மறை ஆற்றலை குஉறிஞ்சி எடுக்கக்கூடிய தன்மையை கொண்டது.

ஆக வாரத்திற்கு இரண்டு முறை வீட்டை சுத்தம் செய்யும் பொழுது தண்ணீரில் ஒரு கைப்பிடி கல் உப்பை போட்டு வீடுகளை துடைத்து வாருங்கள். இதில் வீட்டில் இருக்கக்கூடிய கண் திருஷ்டி, மனக்கசப்புகள், தீய சக்திகள் போன்றவை விலகி புத்துணச்சி கிடைக்கிறது.
3. வார்த்தைகளில் கவனம்:
நம்முடைய வார்த்தைகளுக்கு எப்பொழுதும் அதிக அளவில் கவனம் இருக்கிறது. யாருடைய வார்த்தை எந்த நேரத்தில் வலிமையாகும் என்பது யாரும் அறிந்திடாத ஒன்று. காலம் கடந்து நம்முடைய வார்த்தை நிஜமாகி துன்பப்படுவதும் நாமாகத்தான் இருக்கும்.
ஆக, வீடுகளில் எவ்வளவு பெரிய கஷ்டமாக இருந்தாலும் நல்ல வார்த்தைகள் பாசிட்டிவான பேச்சுகளை வைத்துக் கொள்ளும் பொழுது அதுவும் நமக்கு ஒரு நல்ல நிவாரணமாக அமையும்.
| ஆன்மீகம்/ஜோதிடம் குறித்த தகவல்களை பெற IBC பக்தி வாட்ஸ் அப் குழுவில் இணைந்து கொள்ளுங்கள். |