கும்பத்தில் ராகுவின் சஞ்சரிப்பு.., எதிரிகளை வென்றெடுக்கும் ராசியினர்
ஜோதிடத்தில் ராகுவும் கேதுவும் நிழல் கிரகங்களாகக் கருதப்படுகின்றன.
ராகுவின் ராசியான கும்ப ராசியில் இருந்து சனி பகவான் சமீபத்தில் மீன ராசிக்கு வருகை தந்திருக்கிறார்.
அதேபோல், வரக்கூடிய மே 18ஆம் திகதி ராகு பகவான், மீன ராசியில் இருந்து கும்ப ராசிக்குப் பெயர்ச்சி ஆகிறார்.
சனியின் ராசி அடையாளமான கும்பத்தில் ராகுவின் பெயர்ச்சியால் குறிப்பிட்ட 3 ராசிக்காரர்கள் நற்பலன்களைப் பெறப்போகிறார்கள்.
தனுசு
எதிர்பார்த்ததை விட அதிக ஆடம்பர வசதிகள் கிடைக்கும். ராகு பகவானால், தனுசு ராசியினருக்கு சில நேரங்களில் மன அழுத்தம் ஏற்படலாம். ஆனால், நீங்கள் பொறுமையாக இருக்க வேண்டிய நேரம் இதுவாக இருக்கும். திடீர் உந்துதலால் முடிவுகளை எடுக்க வேண்டாம். எனவே, பொறுமையாக அனுபவசாலிகளிடம் கலந்து ஆலோசித்து முடிவுகளை எடுப்பது நல்லது. வீடு, வாகன சுகபலன்கள் கிடைக்கலாம். ரியல் எஸ்டேட் தொழிலில் ஈடுபட்டுள்ள நல்ல பலன்கள் கிடைக்கலாம்.
மிதுனம்
மிதுன ராசியினருக்கு நன்மைகளைத் தரக்கூடியது. தாம்பத்திய வாழ்க்கை சிறக்க உதவுகிறது. காதல் வாழ்க்கை உங்கள் வாழ்க்கையில் நன்றாக இருக்கும். வேலை செய்பவர்களுக்கு வாழ்வில் நல்ல தருணங்கள் அமையும். பதவி உயர்வும் கிடைக்கும். சமூகத்தில் மரியாதை உயரும்.
ரிஷபம்
ரிஷப ராசியினருக்கு நன்மைகளைத் தரக் கூடியது. நன்மை தரும். எந்த பெரிய வேலையும் உங்களுக்கு வெற்றியளிக்கும். இந்த மாற்றம் உங்கள் வருமானத்தை அதிகரிக்கும். வருமானத்தால் பொதுவெளியில் மதிக்காதவர்கள்கூட மதிப்பார்கள்.
ஆன்மீகம்/ஜோதிடம் குறித்த தகவல்களை பெற IBC பக்தி வாட்ஸ் அப் குழுவில் இணைந்து கொள்ளுங்கள். |