புயலே வந்தாலும் இந்த ராசியினரை மட்டும் எதுவும் செய்யமுடியதாம்- யார் தெரியுமா?
வாழ்க்கை என்பது எல்லா நேரங்களிலும் ஒரே போல் இருப்பதில்லை. சில நேரங்களில் நாம் எதிர்ப்பாராத கடினமான காலங்களில் நிறுத்தி விடுகிறது. அவ்வாறு வாழ்க்கை கொடுக்கும் கடினமான காலத்தை எல்லோராலும் எளிதாக கடந்து விடமுடிவது இல்லை.
ஒரு சிலரால் மட்டுமே வாழ்க்கை எவ்வளவு ஒரு துன்பமான நிலை கொடுத்தாலும் அவர்கள் மீண்டும் மீண்டும் எழக்கூடிய ஒரு ஆற்றலை பெற்றிருப்பார்கள். இதற்கு அவர்களுடைய ராசி அதிபதியும் காரணமாக இருக்கிறார்கள். அப்படியாக எந்த ராசியினர் துன்பத்தை எல்லாம் தாண்டி மீண்டு வரக்கூடிய பக்குவம் ஆற்றல் கொண்டவர்கள் என்று பார்ப்போம்.

விருச்சிகம்:
ராசிகளில் எதையும் சாதிக்கக் கூடிய திறனை கொண்ட விருச்சிக ராசியினருக்கு தான் எப்பொழுதும் அதிக அளவில் அடிகள் விழுந்து கொண்டே இருக்கும். விருச்சிக ராசியினர் என்றாலே இவர்களை சுற்றி இருப்பவர்கள் இவர்களை எப்பொழுது வீழ்த்த வேண்டும் என்ற ஒரு மனநிலையில் இருப்பார்கள்.
ஆதலால் எவ்வளவு கடினமான ஒரு சூழ்நிலை இருந்தாலும் இவர்களுக்கு இயற்கையாகவே அதை தாங்கி கடந்து எழுந்து நிற்கக்கூடிய ஒரு வலிமை பிறக்கிறது. அதனால் எவ்வளவு சோதனைகள் வாழ்க்கை கொடுத்தாலும் இவர்கள் மீண்டும் மீண்டும் எழுந்து நிற்பார்கள்.
மகரம்:
சனிபகவானுடைய ஆதிக்கத்தை பெற்ற மகர ராசிக்கு நிறைய உணர்வு போராட்டங்கள் இருக்கும். இவர்கள் எதையும் சரியாக கையாள வேண்டும், எல்லோரும் சரியான திசையில் பயணிக்க வேண்டும் என்று ஒரு தீர்க்கமான மனநிலையை வைத்திருப்பார்கள்.
அதனாலே இந்த மகர ராசியினரிடம் எல்லோருக்கும் பழகுவதில் ஒரு சில சிக்கல்கள் உண்டாகும். அதனால் இவர்களுக்கு நிறைய எதிரிகள் உருவாகிவிடுவார்கள். இருப்பினும் மகர ராசியினர் இதை எதையும் கண்டுகொள்ளாமல் எல்லாவற்றையும் தூசி போல் தட்டி விட்டு கடந்து முன்னே செல்லக் கூடியவர்கள்.
கும்பம்:
சனிபகவானுடைய ஆதிக்கத்தை பெற்ற கும்ப ராசி சிறந்த உழைப்பாளிகள். 10 நபர்கள் இருக்கும் இடத்தில் இவர்களுடைய கருத்துக்கள் மட்டும் வித்தியாசமானதாகவும் எல்லோரையும் சிந்திக்க வைக்க கூடியதாகவும் இருக்கும்.
இவ்வளவு அற்புத ஆற்றல்கள் நிறைந்த கும்ப ராசியினர் பார்ப்பதற்கு அழகாகவும் கண்ணியமாகவும் இருப்பார்கள். இந்த தோற்றமே பலருக்கும் ஒரு பொறாமையை உண்டு செய்து இவர்கள் மீது ஒரு எதிர் வினையை தூண்டிவிடுகிறது . இருப்பினும் இவர்கள் எதற்கும் மனதை தளரவிடாமல் போராடி ஜெயிக்க கூடியவர்கள்.
| ஆன்மீகம்/ஜோதிடம் குறித்த தகவல்களை பெற IBC பக்தி வாட்ஸ் அப் குழுவில் இணைந்து கொள்ளுங்கள். |