மீன ராசியில் நுழையும் புதன்.. கவனமாக இருக்க வேண்டிய 3 முக்கிய ராசிகள்.
ஜோதிடத்தில் கிரக மாற்றங்கள் மிகவும் முக்கியமானவை. அந்த வகையில் 2026 ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் நிறைய முக்கிய கிரகம் மாற்றங்கள் நிகழ்கிறது. ஏப்ரல் 11 ஆம் தேதி புதன் பகவான் மீன ராசிக்குள் இடம் மாறுகிறார்.
அங்கு ஏற்கனவே சூரியன், செவ்வாய், சனியுடன், புதனும் சேர்வதால் மீனத்தில் 'சதுர்கிரஹி யோகம்' உருவாகிறது. இதனால் சில முக்கிய ராசிகள் மிகவும் கவனமாக இருக்க வேண்டும் என்று சொல்லப்படுகிறது. அவர்கள் எந்த ராசியினர் என்று பார்ப்போம்.

மேஷம்:
மேஷ ராசிக்காரர்களுக்கு இந்த காலகட்டங்களில் மன அழுத்தம் ஏற்படுகிறது. வேலையில் பொறுப்புகள் அதிகரிக்கலாம். அவசரமாக எந்த ஒரு முடிவுகளையும் எடுக்காதீர்கள். எந்த ஒரு விஷயத்தையும் யோசிக்காமல் முடிவெடுத்து முதலீடு செய்வதை தவிர்க்க வேண்டும். முடிந்த அளவு முக்கிய முடிவுகளை எடுக்கும் பொழுது நண்பர்கள் மற்றும் பெரியவர்களின் ஆலோசனையை கேட்பது நல்லது.
துலாம்:
துலாம் ராசிக்காரர்கள் இந்த காலகட்டங்களில் மிகவும் கவனமாக இருக்க வேண்டும். எந்த ஒரு ஒப்பந்தம் செய்வதற்கு முன்பும் முழுமையான தகவல்களை பெற்றுக் கொள்ளுங்கள். அவசரமான முடிவுகள் தேவையில்லாத நஷ்டத்தை உருவாக்கும். முதலீடு செய்வதற்கு முன்பாக ஒரு முறைக்கு பலமுறை யோசியுங்கள். குடும்பத்தில் பெற்றோர்களுடைய உடல் நிலையில் சற்று கவனமாக இருக்க வேண்டும். நெருக்கமானவர்களால் துரோகத்தை சந்திப்பீர்கள்.
சிம்மம்:
சிம்ம ராசிக்காரர்களுக்கு இந்த காலகட்டமானது மிக மிக அவசியமாக இருக்க வேண்டிய நிலையை குறிக்கிறது. எதிரிகளிடம் மிகவும் எச்சரிக்கையாக இருக்க வேண்டும். யாரையும் கண்மூடித்தனமாக நம்ப வேண்டாம். கடின உழைப்பிற்கு ஏற்ற பலன் கிடைக்கும் என்றாலும் நீண்ட நாட்கள் அதற்கு காத்திருக்க வேண்டிய அவசியம் உருவாகிறது. உங்களை நீங்கள் வேலையில் அதிக அளவு ஈடுபடுத்தும் பொழுது பிரச்சினைகளில் இருந்து பார்த்துக் கொள்ளலாம்.
| ஆன்மீகம்/ஜோதிடம் குறித்த தகவல்களை பெற IBC பக்தி வாட்ஸ் அப் குழுவில் இணைந்து கொள்ளுங்கள். |