2026-ல் நடக்கும் முதல் சூரிய கிரகணம்.. கவனமாக இருக்க வேண்டிய ராசிகள்
அறிவியல் ரீதியாக சூரிய கிரகணம் ஒரு வானியல் நிகழ்வாக பார்க்கப்பட்டாலும் ஜோதிடத்தில் அது ஒரு முக்கிய நிகழ்வாக கருதப்படுகிறது. சூரியன் மற்றும் பூமிக்கிடையே சந்திரன் சென்றால் சூரிய கிரகணம் நிகழும். இந்த கிரகணம் ஒரு வளைய சூரிய கிரகணம் ஆகும். இந்த கிரகணத்தில் சந்திரன், சூரியனை மையப் பகுதியில் மறைப்பதால் சூரியன் ஒரு வளையம் போல் தோன்றும்.
இதனை தான் ரிங் ஆஃப் ஃபயர் என்று அழைப்பார்கள். அந்த வகையில் 2026 ஆம் ஆண்டு சூரிய கிரகணம் பிப்ரவரி 17 அன்று நடக்கிறது. இது தென்னாப்பிரிக்கா, தெற்கு அர்ஜென்டினா மற்றும் அண்டார்டிகாவில் நேரடியாக காணலாம்.
இந்தியாவில் பார்க்க முடியாததால் எந்த ஒரு ஆபத்தும் இல்லை. மேலும் இந்திய நேரத்தின் அடிப்படையில் பிப்ரவரி 17 பிற்பகல் 326 மணிக்கு தொடங்கி மறுநாள் காலை 7. 58 மணி வரை இந்த கிரகணம் நிகழ இருக்கிறது. இதனால் ஜோதிடத்தில் குறிப்பிட்ட சில ராசியினர் மிகவும் கவனமாக இருக்க வேண்டும் என்று சொல்லப்படுகிறது. அவர்கள் எந்த ராசியினர் என்று பார்ப்போம்.

மேஷம்:
மேஷ ராசியினர் இன்று முக்கியமான சில முடிவுகள் எடுப்பதை தள்ளி போட வேண்டும். உணவு விஷயங்களில் கவனமாக இருங்கள். தேவையில்லாமல் தொலைதூர பயணம் மேற்கொள்வதை தவிர்ப்பது நல்லது. வீண் வாக்குவாதங்கள் மற்றும் கோபம் ஏற்பட வாய்ப்பு உள்ளதால் நிதானத்தை கடைபிடிக்க வேண்டும்.
சிம்மம்:
சிம்ம ராசியினர் இன்று தொழில் ரீதியாக உடன் வேலை செய்பவர்களிடம் சற்று கவனமாக இருக்க வேண்டும். காலை முதல் மனம் சற்று பதற்ற நிலையுடன் காணப்படும் என்பதால் தியானம் போன்ற விஷயங்களில் பங்கு கொள்ளலாம். முடிந்த வரை பணம் பரிமாற்றங்களில் கவனமாக இருங்கள்.
மகரம்:
மகர ராசியினர் இன்று ஆரோக்கியத்தில் மிகுந்த கவனம் வேண்டும். திடீர் செலவுகளை சந்திக்கக்கூடும். ஆடம்பரமாக எந்த ஒரு பொருட்களையும் கடன் வாங்கி வாங்குவதை தவிர்த்து விடுங்கள். யாருக்கும் இன்று எதைப் பற்றியும் யோசிக்காமல் வாக்குறுதிகளை வழங்குதீர்கள். வேலையில் கவனச் சிதறல் ஏற்பட வாய்ப்புகள் இருக்கிறது.
| ஆன்மீகம்/ஜோதிடம் குறித்த தகவல்களை பெற IBC பக்தி வாட்ஸ் அப் குழுவில் இணைந்து கொள்ளுங்கள். |