திடீர் ராஜ யோகத்தை பெரும் 3 குபேர ராசிகள் யார் தெரியுமா?
நம்முடைய இந்து மதத்தில் அட்சய திருதியை மிகவும் விஷேசமான தினமாகும். இந்த ஆண்டு அட்சய திருதியை ஏப்ரல் மாதம் 30ஆம் தேதி புதன் கிழமை கொண்டாடப்படுகிறது. அதாவது, ஒவ்வொரு ஆண்டும் சித்திரை மாதம் வளர்பிறை திருதியை நட்சத்திரத்தில் அட்சய திருதியை கொண்டாடப்படுவது வழக்கம்.
இந்த நாளில் நாம் எந்த காரியம் செய்தாலும் அவை நமக்கு அதிர்ஷ்டத்தை கொடுக்கும் என்கிறார்கள். இவ்வளவு சிறப்பு வாய்ந்த நாளில் உருவாகும் ராஜ யோகங்கள் 12 ராசிகளுக்கும் தாக்கத்தை உண்டாக்கும்.
அதாவது அன்றைய தினம் சதுர்கிரக யோகம், லட்சுமி நாராயண யோகம், கஜசேரி யோகம், மாளவ்ய யோகம் போன்ற 4 யோகங்கள் உருவாகிறது. அப்படியாக, அந்த 4 யோகங்களால் வாழ்க்கையில் பெரும் அதிர்ஷ்டத்தை பெரும் ராசிகள் யார் என்று பார்ப்போம்.
ரிஷபம்:
அட்சய திருதியை நாளில் உருவாகும் 4 ராஜ யோகங்கள் ரிஷப ராசிக்கு வாழ்க்கையில் பெரும் திருப்புமுனையை உண்டாக்குகிறது. இவர்களுக்கு லட்சுமி தேவியின் அருளும் குபேரனின் அருளும் பரிபூர்ணமாக கிடைக்க உள்ளது. இவர்கள் எந்த காரியம் செய்தாலும் அதில் அவர்களுக்கு வெற்றிகள் தேடி வரும். வாழ்க்கையில் உண்டான சிக்கல்கள் எல்லாம் தடம் தெரியாமல் ஓடி விடும்.
மீனம்:
அட்சய திருதியை நாளில் உருவாகும் 4 ராஜ யோகங்கள் மீன ராசிக்கு மனதில் நிம்மதியும் மகிழ்ச்சியும் கொடுக்க உள்ளது. இவர்களுக்கு புதிதாக வீடு கட்டும் யோகம் உருவாகும். கைகளில் தாராளமான பண வரவு இருக்கும். நீண்ட காலமாக நிலுவையில் இருந்த வழக்குகள் எல்லாம் நல்ல முடிவை பெரும். மனதிற்கு பிடித்த பொருட்கள் வாங்கி கொண்டாடுவீர்கள்.
மிதுனம்:
அட்சய திருதியை நாளில் உருவாகும் 4 ராஜ யோகங்கள் மிதுன ராசிக்கு வாழ்க்கையில் நேர்மறை சிந்தனையை கொடுக்க உள்ளது. தாய் தந்தை உங்கள் பேச்சுக்கு முக்கியத்துவம் கொடுப்பார்கள். வழக்கு விவகாரங்கள் உங்களுக்கு சாதகமாக அமையும். குலதெய்வ வழிபாடு இவர்களுக்கு நன்மையை தரும். குடும்பத்தில் சுப நிகழ்ச்சிக்கான பேச்சு வார்த்தை உருவாகும்.
ஆன்மீகம்/ஜோதிடம் குறித்த தகவல்களை பெற IBC பக்தி வாட்ஸ் அப் குழுவில் இணைந்து கொள்ளுங்கள். |