சூரியன் புதன் இணைவால் பதவி உயர்வு பெரும் 3 அதிர்ஷ்ட ராசிகள் யார்?
ஜோதிடத்தில் கிரகங்கள் மிக முக்கியமான பங்கு வகிக்கிறது. கிரகங்கள் மாற்றம் அடையும் பொழுது நம் வாழ்க்கையிலும் மாற்றம் நிகழ்வதை நாம் காண முடியும். அதில் ஒரு சிலருக்கு நேர்மறையான மாற்றமும், சிலருக்கு எதிர்மறையான மாற்றமும் உருவாகும்.
மேலும், கிரகங்களின் ராஜாவாக கருதப்படுபவர் சூரிய பகவான். அவர், கிரகங்களின் இளவரசன் எனக் கூறப்படும் புதனுடன் இணைகிறார். மே மாதத்தில் சூரியன் மற்றும் புதன் இணைவதன் விளைவாக, 3 ராசிக்காரர்கள் நேர்மறையான பலன்களை கொடுக்கிறது. அவர்கள் அந்த காலகட்டத்தில் தனிப்பட்ட மற்றும் தொழில் வாழ்க்கையில் சிறப்பான பலன்களைப் பெறுவார்கள். அவர்கள் எந்த ராசி என்று பார்க்கலாம்.
ரிஷபம்:
ரிஷப ராசிக்காரர்களுக்கு புதன் மற்றும் சூரியனின் சேர்க்கை பல விதமான நன்மைகளை கொடுக்கிறது. இவர்கள் வேலை செய்யும் இடத்தில் நேர்மறை ஆற்றல்களை பெறுவார்கள். எதையும் சுறுசுறுப்பாக செய்யும் காலகட்டம் ஆகும். குடும்பத்தில் மகிழ்ச்சியான சூழ்நிலை உருவாகும். மேற்படிப்பு படிக்க விரும்புபவர்களுக்கு நல்ல வாய்ப்புகள் தேடி வரும்.
சிம்மம்:
சிம்ம ராசிக்காரர்களுக்கு சூரியனும் புதனும் இணைவது தொழிலில் நல்ல மாற்றத்தை கொடுக்கும். இந்த காலகட்டத்தில் எடுக்கும் முயற்சிகள் பெரும் வெற்றியை கொடுக்கும். பொருளாதார நிலை வெகு சிறப்பாக இருக்கும். அலுவலகத்தில் உங்களுக்கான மரியாதை கிடைக்கும்.
கடகம்:
கடக ராசிக்காரர்களுக்கு சூரியனும் புதனும் இணைவது வருமானத்தில் மிக பெரிய முன்னேற்றமும் மாற்றமும் கொடுக்கும். இந்த காலகட்டத்தில் இவர்கள் எண்ணிய காரியங்கள் நிறைவேறும். திடீர் அதிர்ஷ்டம் இவர்களுக்கு செல்வ செழிப்பை உண்டாக்கும். திருமணமாகாதவர்களுக்கு இந்த காலகட்டத்தில் திருமண வாய்ப்பு உண்டு.
ஆன்மீகம்/ஜோதிடம் குறித்த தகவல்களை பெற IBC பக்தி வாட்ஸ் அப் குழுவில் இணைந்து கொள்ளுங்கள். |