2025 ஆம் ஆண்டு கோடீஸ்வர யோகத்தை பெறும் 3 அதிர்ஷ்ட ராசிகள்
மனிதன் வாழ்க்கையில் பணம் என்பது மிகவும் தேவையான ஒன்றாகும். அந்த பணத்தை சம்பாதிப்பதில் இருக்கும் சிக்கல்களைத் தாண்டி அதை சேமிப்பதில் இருக்கும் சிக்கல்கள் தான் அதிக அளவில் இருக்கிறது. அதற்கு கிரக சூழ்நிலைகளும் ஒரு காரணம் என்றே சொல்லலாம். இருந்தாலும் தொடர் கஷ்டம் இருந்தால் அதற்கான நிவாரணமும் இருக்கும்.
கிரகங்கள் மாறும் பொழுது துன்பத்தில் இருந்து விடுதலை நிச்சயம் இருக்கும். அந்த வகையில் 12 ராசிகளில் 2025 ஆம் ஆண்டு எந்த ராசிக்கு பொருளாதார ரீதியாக நல்ல மாற்றம் முன்னேற்றம் இருக்க போகிறது என்று பார்ப்போம்.
மேஷம்:
மேஷ ராசிக்காரர்கள் கடந்த இரண்டு வருட காலமாக பொருளாதார ரீதியாக நிறைய சிக்கல் மற்றும் இழப்புகளை சந்தித்து இருப்பார்கள். அவர்களுக்கு இந்த 2025 ஆம் ஆண்டு நல்ல வருமானத்தை பெற்று கொடுக்க போகிறது. தொழில் ரீதியாக நஷ்டத்தை சந்தித்தவர்களுக்கு திடீர் லாபம் கிடைக்கும். பொருளாதாரத்தில் நல்ல ஏற்றம் இருக்கும். கடன் வாங்கியவர்கள் கட்டாயம் அதை அடைக்கும் பாக்கியம் உண்டாகும்.
ரிஷபம்:
ரிஷப ராசியினர் வேலை சம்பந்தமாக சில நாட்கள் பெருந்துயரை சந்தித்து இருப்பார்கள். அவர்களுக்கு இந்த 2025ஆம் ஆண்டு பணியில் நல்ல மாற்றமும் முன்னேற்றமும் இருக்கும். அலுவலக மாற்றத்தால் சிலருக்கு நல்ல முன்னேற்றம் இருக்கும். இடம் விற்க வேண்டும் என்று காத்திருப்பவர்களுக்கு நல்ல பதில் கிடைக்கும். பொன் பொருள் சேர்க்கை மகிழ்ச்சியை கொடுக்கும்.
சிம்மம்:
சிம்ம ராசியினர் பல வருடம் தவற விட்ட வாய்ப்புகளை இந்த 2025 ஆம் ஆண்டு பிடிக்க போகிறார்கள். வேலை இல்லாதவர்களுக்கு நல்ல வேலை கிடைக்கும். வியாபாரத்தை விரிவு படுத்தும் செயலில் நல்ல அதிர்ஷ்டம் கிடைக்கும். வங்கியில் வாங்கிய கடனை அடைப்பீர்கள். சிலருக்கு தங்கம் வாங்கி சேர்க்கும் யோகம் உண்டாகும்.
ஆன்மீகம்/ஜோதிடம் குறித்த தகவல்களை பெற IBC பக்தி வாட்ஸ் அப் குழுவில் இணைந்து கொள்ளுங்கள். |