பொறாமை என்பது மனிதர்களின் இயல்பான குணங்களில் ஒன்று என்றாலும், ஒரு சிலரால் சாதாரணமாக ஒருவரின் வளர்ச்சியை எடுத்துக்கொள்ள முடியாது. அவர்கள் தான் மட்டுமே என்ற எண்ணத்தால் அதிகம் பொறாமை கொள்வார்கள். அவ்வாறு பிறரை பார்த்து அடிக்கடி பொறாமை கொள்ளும் ராசிகள் யார் என்று பார்ப்போம்.
மகரம்:
சனியின் வீடான மகர ராசிக்காரர்கள் தொழிலில் தான் மட்டுமே வளர்ச்சியை சந்திக்க வேண்டும் என்று எண்ணம் கொண்டு இருப்பவர்கள். இவர்களுக்கு யாரேனும் தொழிலில் இவர்களை விட அதிக முனைப்போடு செயல்பட்டால் அவர்களால் பொறுத்துக்கொள்ள முடியாது. அந்த உணர்ச்சிகளை அவர்கள் உடனடியாக வெளிப்படுத்தி விடுவார்கள்.
விருச்சிகம்:
செவ்வாயின் ஆட்சி வீடான இவர்கள் உணர்ச்சிகளை தங்கள் கட்டுப்பாட்டில் வைத்துக்கொள்ள முடியாதவர்கள். இவர்கள் யாரிடமும் அதிகம் நெருங்கி பழகமாட்டார்கள். காரணம் தன்னை விட தன்னுடன் பழகுபவர்கள் ஒருப்படி கீழே இருக்கவேண்டும் என்று நினைப்பவர்கள்.
கன்னி:
புதன் வீடான கன்னி ராசியினர் மிகவும் புத்திசாலியானவர்கள். இவர்கள் அதிக உழைப்பை போடுபவர்கள். இவர்கள் அடுத்தவர்களை எப்பொழுதும் குறைந்து மதிப்பீடு செய்யக்கூடியவர்கள். ஆதலால் அவர்களை விட யாரேனும் அதிக அளவில் முயற்சிகள் செய்து வெற்றி கொண்டால் கன்னி ராசியினரால் அதை பொறுத்துக்கொள்ள முடியாது.
ஆன்மீகம்/ஜோதிடம் குறித்த தகவல்களை பெற IBC பக்தி வாட்ஸ் அப் குழுவில் இணைந்து கொள்ளுங்கள். |