ஒருவரை பழிவாங்கும் வரை இவர்கள் விடமாட்டார்களாம்.. எந்த ராசியினர் தெரியுமா?
மனிதனுக்கு எவ்வளவு நல்ல குணம் இருக்கிறதோ அதேபோல் தீய குணங்களும் அவனிடம் தான் இருக்கிறது. அப்படியாக ஒருவருக்கு யாரேனும் அந்த நபரை பற்றி குறை சொல்லிவிட்டாலோ அல்லது அவமானம் செய்து விட்டாலோ அந்த நபரால் தாங்கிக் கொள்ள முடியாது.
காலம் கடந்தாவது அவர்களை பழி தீர்த்து விட வேண்டும் என்ற ஆதங்கத்தோடு இருப்பார்கள். இதற்கு முதலில் தூண்டுதலாக இருக்கக்கூடியது அவர்களுடைய ராசி அமைப்பு தான். அந்த வகையில் எந்த ராசியில் பிறந்தவர்களுக்கு ஒருவரை பழிவாங்கும் வரை அவர்களால் நிம்மதியாக இருக்க முடியாது என்று பார்ப்போம்.

விருச்சிகம்:
செவ்வாய் பகவானின் வீடான விருச்சிக ராசியினரிடம் நாம் எப்பொழுதும் கவனமாகவே இருக்க வேண்டும். இவர்கள் எந்த ஒரு விஷயத்தையும் அவ்வளவு எளிதாக இயல்பாக கடந்து செல்ல மாட்டார்கள்.
யாரேனும் இவர்களை காயப்படுத்தி விட்டார்கள் என்றால் மீண்டும் அந்த நபரை காயப்படுத்தும் வரை இவர்களால் சாதாரணமாக இருக்க முடியாது. ஒருவர் தனக்கு செய்ததை மீண்டும் அவர்களுக்கு செய்து விட வேண்டும் என்ற எண்ணம் இவர்களிடத்தில் அதிகம் இருக்கும்.
கடகம்:
கடக ராசியை ஆளக்கூடிய கிரகம் சந்திர பகவான் ஆவார். இவர்களுக்கு மனரீதியாகவே எப்பொழுதும் ஒரு குழப்ப நிலை இருந்து கொண்டே இருக்கும். மேலும் இவர்களுக்கு தான் என்ற அகங்காரமும் சற்று அதிகமாகவே இருக்கும்.
எந்த ஒரு விஷயத்தையும் இவர்கள் சாதாரணமாக எடுத்துக் கொள்ள மாட்டார்கள். இவர்களை யாரேனும் காயப்படுத்தி விட்டால் அந்த நபரை பொறுமையாக காத்திருந்து நேரம் பார்த்து சரியான பதிலை கொடுக்க கூடிய ஒரு நபராக இருப்பார்கள்.
ரிஷபம்:
ரிஷப ராசியினரை பொறுத்தவரை வெளியே தாங்கள் மிகவும் மென்மையானவர்கள் என்று காட்டிக் கொண்டாலும் இவர்கள் மனதிற்குள் ஒருவரைப் பற்றி எப்பொழுதும் எடை போட்டுக் கொண்டே இருப்பார்கள்.
ஒருவர் செய்யக்கூடிய செயலை இவர்கள் மிகவும் கவனமாக கவனித்துக் கொண்டு அந்த செயல் இவர்களை ஏதேனும் காயப்படுத்தி இருக்கிறது அல்லது இவர்களுடைய செருக்கை தொந்தரவு செய்து இருக்கிறது என்றால் அவர்களை காத்திருந்து இவர்கள் பழி வாங்கி விடுவார்கள்.
| ஆன்மீகம்/ஜோதிடம் குறித்த தகவல்களை பெற IBC பக்தி வாட்ஸ் அப் குழுவில் இணைந்து கொள்ளுங்கள். |