வாழ்க்கையில் எப்பொழுதும் போராட்டங்களை சந்திக்கும் ராசிகள் யார் தெரியுமா?
ஜோதிட சாஸ்திரப்படி 12 ராசிகளுக்கும் தனி குணாதிசியங்கள் இருப்பதாக சொல்லப்படுகிறது. அந்த வகையில் ஒரு சில ராசிகளுக்கு இயல்பாகவே எதையும் சில போராட்டங்களுக்கு பிறகே வெற்றி அடையும் நிலை உருவாகுவதாக சொல்கிறார்கள். அவர்கள் எந்த ராசிகள் என்று பார்ப்போம்.
விருச்சிகம்:
விருச்சிக ராசிக்காரர்கள் வாழ்க்கையில் துரோகம், நிதி இழப்புகள் உடல் ஆரோக்கியத்தில் சிக்கல்கள் என்று எல்லாவற்றையும் சிறு வயதிலே சந்தித்து நிறைய அனுபவம் பெற்று இருப்பார்கள். எல்லோருக்கும் மிக எளிதாக கிடைக்கும் சில விஷயங்கள் இவர்களுக்கு பல போராட்டங்கள் தடைகளுக்கு பிறகே கிடைக்கிறது. இருந்தாலும், அவர்கள் வீழ்ந்து போகாமல் மீண்டும் எழுந்து சாதிக்கும் திறன் பெற்றவர்களாக இருக்கிறார்கள்.
மகரம்:
சனியால் ஆளப்படும் மகர ராசிக்காரர்கள் மெதுவாக மற்றும் நிலையான வெற்றியை சந்திக்கக்கூடியவர்கள். வாழ்க்கையில் எத்தனை பெரிய சிக்கல்கள் வந்தாலும், இதுவும் நன்மைக்கே என்று போராடும் திறன் படைத்தவர்கள். இவர்கள் எவ்வளவு பெரிய தோல்வியை சந்தித்தாலும் மீண்டும் எழுந்து போராடும் தைரியம் மிக்கவர்கள். இவர்கள் பெரும்பாலும் துரோகத்தை அவர்களின் அலுவலகத்தில் சந்தித்திருப்பார்கள்.
மீனம்:
மீன ராசிக்காரர்கள் சிறிதாக ஒரு விஷயம் செய்யவேண்டும் என்றாலும் அதில் மிக பெரிய போராட்டத்தை சந்திக்கக்கூடியவர்கள். இவர்களை பற்றி பலரும் புரிந்து கொள்ளாமல் மனதை புண் படும் படி பேசிவிடுவதுண்டு. இருந்தாலும் அவர்கள் பல சூழ்நிலையில் கடமை தவறாமல் செயல்படுவார்கள். ஆன்மீகத்தில் அதீத ஆர்வம் கொண்ட இவர்கள் எதையும் மன உறுதியோடு போராடி சாதிப்பார்கள்.
ஆன்மீகம்/ஜோதிடம் குறித்த தகவல்களை பெற IBC பக்தி வாட்ஸ் அப் குழுவில் இணைந்து கொள்ளுங்கள். |