இனி 76 நாட்களுக்கு சக்தியை இழக்கும் சனி- இந்த ராசிகளுக்கு கொண்டாட்டம் தான்
நவகிரகங்களில் சனிபகவான் நீதிமானாக இருக்கக் கூடியவர். இவர் நவம்பர் 28ஆம் தேதி அன்று நேரடியாக அவருடைய இயக்கத்தை தொடங்கினார். அந்த நிலையில் ஒவ்வொரு ராசியும் சனி பகவானுடைய தாக்கத்தை பெற்றுக் கொண்டிருக்கிறார்கள்.
ஆனால் டிசம்பர் 5ஆம் தேதி முதல் சனிபகவான் பலவீனமான நிலைக்கு சென்றுள்ளார். இதனால் அனைத்து ராசிக்கும் சனிபகவானுடைய தாக்கமானது 76 நாட்களுக்கு ஒரு நல்ல நன்மை செய்யக்கூடியதாக இருக்கும் என்று சொல்லப்படுகிறது. அப்படியாக சனியின் கடுமையான தாக்கத்திலிருந்து விடுபட்டு அதிர்ஷத்தை பெறக்கூடிய அந்த ராசியினர் யார் என்று பார்ப்போம்.

துலாம்:
துலாம் ராசிக்கு சனி பகவான் நான்கு மற்றும் ஐந்தாம் வீடுகளை ஆட்சி செய்து வருகிறார். தற்பொழுது ஆறாம் வீட்டிற்குள் சனி பகவான் சஞ்சரிக்க உள்ளார். இது ஒரு சக்தி வாய்ந்த இடமாகும். இதனால் போட்டி தேர்வுகளுக்கு தயாராகக்கூடிய மாணவர்களுக்கு ஒரு நல்ல முன்னேற்றம் இருக்கக்கூடிய நிலை உண்டு. மேலும் வேலை மாற்றம் செய்ய வேண்டும் என்று நினைப்பவர்களுக்கு நிச்சயம் நினைத்த இடத்தில் வேலையும் உறுதியாக வேலை கிடைக்க கூடிய வாய்ப்புகளும் உண்டு. கல்வியில் தடைகள் இருந்தால் அவை யாவும் விலகி நல்ல முன்னேற்றம் பெறுவார்கள்.
கும்பம்:
கும்ப ராசிக்கு இரண்டாவது வீட்டில் சனிபகவான் இருக்கிறார். இவர் தான் செல்வம் பேச்சு குடும்பம் மற்றும் பரம்பரை ஆகியவற்றை குறிக்க கூடியவர். சனியின் பலம் குறைவு காரணமாக கும்ப ராசியினருக்கு ஒரு மிகப்பெரிய வாய்ப்புகள் இவர்களுக்கு தொழில் ரீதியாக காத்திருக்கிறது. நீண்ட நாட்களாக உங்களிடம் பணம் வாங்கிவிட்டு தருகிறேன் என்று சொன்னவர்கள் அவர்களாகவே உங்களிடம் வந்து வாங்கிய பணத்தை கொடுக்க கூடிய ஒரு அற்புதமான நிலை உருவாகும். மனதில் நிம்மதியை பெற போகிறீர்கள். நல்ல உறக்கம் உங்களுக்கு இந்த காலகட்டத்தில் வரப்போகிறது.
மீனம்:
மீன ராசியினருக்கு சனி பகவானுடைய இந்த பலவீனம் காரணமாக இவர்களுடைய மன அழுத்தம் குறைய போகிறது. தேவையற்ற செலவுகளை இவர்கள் குறைத்து வாழ்க்கையை ஒரு உன்னதமான நிலைக்கு செல்ல போகிறார்கள். சிலருக்கு ஆன்மீகத்தில் அதிக ஈடுபாடு இருக்கும். சுற்றி உள்ளவர்கள் உங்களை புரிந்து கொண்டு நடந்து கொள்வார்கள். அதே சமயம் நீங்கள் சுற்றியுள்ளவர்களுக்கு ஒரு நல்ல அன்பு கொடுக்கக்கூடிய வாய்ப்புகள் உருவாக போகிறது. நிச்சயமாக எதிரிகளால் ஏற்பட்ட தொல்லையிலிருந்து நீங்கள் ஓரளவிற்கு விடுபட்டு வாழ்க்கையில் நிம்மதியாக கடத்திச் செல்லக்கூடிய நிலை உருவாகும்.
| ஆன்மீகம்/ஜோதிடம் குறித்த தகவல்களை பெற IBC பக்தி வாட்ஸ் அப் குழுவில் இணைந்து கொள்ளுங்கள். |