2026ல் பிரச்சனைகள் தீர 12 ராசிகளும் வழிபாடு செய்ய வேண்டிய தெய்வங்கள்
ஜோதிடத்தில் 12 ராசிகளுக்கும் எவ்வாறு உரிய கிரகங்கள் இருக்கிறதோ, அதேபோல் 12 ராசிகளுக்கும் உரிய தெய்வங்கள் இருக்கிறது. அந்த தெய்வங்களை நாம் முறையாக வழிபாடு செய்யும்பொழுது வெற்றிகள் குவிவதோடு நமக்கு அந்த தெய்வங்கள் துணை நின்று வாழ்க்கையில் சந்திக்கின்ற இன்னல்களை போக்கி நன்மையை செய்வார்கள்.
அந்த வகையில் 2026 ஆம் ஆண்டு எல்லோரும் ஒரு புது தொடக்கத்துடன் வாழ்க்கையை தொடங்க வேண்டும் என்று ஆவலாக காத்திருக்கின்ற வேளையில் 12 ராசிகளும் 2026 ஆம் ஆண்டு வெற்றிகள் பெறவும், கடன் பிரச்சனை மற்றும் குடும்ப பிரச்சனைகளில் இருந்து வெளியே வரவும் வழிபாடு செய்ய வேண்டிய தெய்வங்களை பற்றி பார்ப்போம்.

மேஷம், விருச்சிகம்:
இந்த இரண்டு ராசிகளின் அதிபதி செவ்வாய் பகவான் ஆவார். ஆகவே இவர்கள் முருகப் பெருமானை பற்றி கொண்டால் அவர்களுடைய வாழ்க்கையில் நிதானம் உண்டாகும். செவ்வாய் என்றாலே முருகப்பெருமான் தான். இவர்கள் முருகப்பெருமானை சரணடையாமல் எந்த ஒரு காரியமும் இவர்களுக்கு கைகூடி வரப்போவதில்லை. ஆதலால் முருகனைப் பற்றிக் கொண்டால் வாழ்க்கை வளமாக மாறும்.
ரிஷபம், துலாம்:
இந்த இரண்டு ராசிகளின் அதிபதி சுக்கிர பகவான் ஆவார். சுக்கிர பகவானின் அம்சமாக போற்றி வழிபாடு செய்யப்பட கூடியவர் மகாலட்சுமி தேவியார். ஆக இவர்கள் தங்களுடைய வாழ்க்கையில் நிலையான செல்வம் பெறவும் நல்ல சுகபோக வாழ்க்கை அனுபவிக்கவும் மகாலட்சுமி தாயாரை மறக்காமல் வெள்ளிக்கிழமை தோறும் வழிபாடு செய்தும் மகாலட்சுமிக்கு உரிய மந்திரங்களை பாராயணம் செய்யும்போது நிச்சயம் நல்ல ஏற்றம் இவர்களுடைய வாழ்க்கையில் பெறக்கூடும்.
மிதுனம் கன்னி:
இந்த இரண்டு ராசிகளின் அதிபதி புதன் பகவான் ஆவார். புதன் பகவானுக்குரிய இறைவன் விஷ்ணு பகவானாக இருக்கிறார். மேலும் விஷ்ணு பகவானை வழிபாடு செய்வதற்கு புதன்கிழமை உகந்த நாளாக இருக்கிறது. ஆக இவர்கள் பேச்சிலும் சொல் திறனிலும் சிறந்து விளங்கி எண்ணங்கள் யாவும் சீராக அமையப்பெற விஷ்ணு பகவானை சரணடைவதை தவிர்த்து இவர்களுக்கு வேற வழியே இல்லை. விஷ்ணு பகவானை வழிபாடு செய்யும்பொழுது தான் இவர்களுக்கு இருக்கக்கூடிய குழப்பங்கள் யாவும் நீங்கி தெளிவான முடிவை எடுக்க முடியும்.

கடகம்:
கடக ராசியின் அதிபதி சந்திர பகவான் ஆவார். சந்திரன் தான் ஒருவருடைய மனதிற்கு காரணமாக இருக்கிறார். ஆக இவர்கள் திருப்பதி பெருமாளை வழிபாடு செய்வது இவர்களுக்கு ஏற்படக்கூடிய மனத் தொந்தரவுகளை போக்குவதோடு வாழ்க்கையில் சந்திக்கின்ற கடன் பிரச்சினைகள் யாவும் விலகும்.
சிம்மம்:
சிம்ம ராசியின் அதிபதி சூரிய பகவான் ஆவார். இவர்கள் சிவபெருமானை வழிபாடு செய்தால் நிச்சயம் அவர்களுக்கு ஒரு நிலையான வாழ்க்கை அமையும். அதாவது இவர்கள் எதையும் கடுமையாக செய்ய கூடிய சிம்ம ராசியினருக்கு வாழ்க்கையில் நிதானம் வேண்டும் என்றால் இவர்கள் சிவபெருமானின் சரணடைவது மட்டுமே ஒரு நல்ல மாற்றத்தை கொடுக்கும்.
தனுசு, மீனம்:
இந்த இரண்டு ராசிகளின் அதிபதி குரு பகவான் ஆவார். ஆக இவர்கள் திருச்செந்தூரில் இருக்கின்ற முருகப்பெருமானை பற்றி கொள்ள வேண்டும். திருச்செந்தூர் குரு ஸ்தலமாக கருதப்பட்டு வருவதால் இங்கு சென்று வழிபாடு செய்யும் பொழுது தான் ஒருவருக்கு கல்வியை, ஞானம், தொழில் வாழ்க்கையில் வெற்றி மற்றும் குரு தோஷத்திற்கான நிவர்த்தி என்று எல்லா பலன்களும் கிடைக்கின்றது.
மகரம் கும்பம்:
இந்த இரண்டு ராசிகளின் அதிபதி சனி பகவான் ஆவார். ஆக இவர்கள் ஆஞ்சநேயர் வழிபாடும், பெருமாள் வழிபாடு செய்வது இவர்களுக்கு நல்ல பலன்களை கொடுக்கும். சனி பகவான் கர்ம காரகனாக இருக்கிறார். ஆக இவர்களுக்கு அவ்வப்போது சில தடைகள் சோம்பேறித்தனம் எல்லாம் வாழ்கையில் வருவது இயல்பு. அதனால் அதிலிருந்து இவர்கள் வெளியே வருவதற்கு ஆஞ்சநேயர் வழிபாடு இவர்களுக்கு கை கொடுக்கும்.
| ஆன்மீகம்/ஜோதிடம் குறித்த தகவல்களை பெற IBC பக்தி வாட்ஸ் அப் குழுவில் இணைந்து கொள்ளுங்கள். |