அந்த ஆண்டவனே நினைத்தாலும் இந்த 3 ராசிகளை தோற்கடிக்கவே முடியாதாம்
ஜோதிடத்தில் ஒவ்வொரு ராசிக்கும் ஒவ்வொரு குணாதிசயங்கள் இருக்கும். அப்படியாக, குறிப்பிட்ட சில ராசியினர் மிகுந்த பிடிவாதமும் எதையும் சாதிக்கக்கூடிய திறனும் கொண்டு இருப்பார்கள். மேலும், ஒரு சில ராசியினரை இறைவனே நினைத்தாலும் தோற்கடிக்கவே முடியாத அளவிற்கு அவர்களிடம் வலிமை இருக்குமாம். அவர்கள் யார் என்று பார்ப்போம்.

ரிஷபம்:
ரிஷப ராசியினர் எவ்வளவு முறை தோற்றாலும் எவ்வளவு பெரிய கஷ்டங்கள் வந்தாலும் இவர்களுடைய பொறுமையையும் தன்னம்பிக்கையை மட்டும் இவர்கள் இழப்பதே இல்லை. இவர்கள் ஒரு இலக்கை நோக்கி பயணிக்க தொடங்கி விட்டால் அதிலிருந்து பின் வாங்க மாட்டார்கள்.
விருச்சிகம்:
இவர்கள் ஒவ்வொரு தடவையும் தோற்றுப் போகும் பொழுது இவர்களை சுற்றி இருப்பவர்கள் இவர்களை ஏளனம் செய்வது உண்டு. ஆனால் அவ்வாறு ஏளனம் செய்பவர்களுக்கு முன்னால் இவர்கள் மிகப்பெரிய அளவில் வாழ்ந்து காட்ட வேண்டும் என்ற ஒரு குறிக்கோளை எடுத்து இவர்கள் வாழ்ந்து காட்டி விடுகிறார்கள்.
மகரம்:
இவர்களுடைய உழைப்பை உதாசீனம் செய்யாத நபர்கள் யாருமே இருக்க மாட்டார்கள். இருப்பினும் இவர்கள் அதற்கெல்லாம் தலைகுனிவதில்லை. அதற்கெல்லாம் அஞ்சுவதும் இல்லை. நடப்பது நடக்கட்டும் என்று தனக்குப் பிடித்ததை செய்வதில் இவர்கள் ஒருபோதும் பின்வாங்க மாட்டார்கள் நினைத்ததை முடித்துவிடுவார்கள்.
| ஆன்மீகம்/ஜோதிடம் குறித்த தகவல்களை பெற IBC பக்தி வாட்ஸ் அப் குழுவில் இணைந்து கொள்ளுங்கள். |