ஜோதிட ரீதியாக வெள்ளி ஒரு மனிதனுடைய மன நிலையை சமநிலைப்படுத்துவதாக சொல்லப்படுகிறது. ஆதலால் வெள்ளி அணியும் பொழுது அந்த நபருக்கு அதிர்ஷ்டமும் மனநிலையில் எந்த ஒரு தடுமாற்றமும் இல்லாத ஒரு நிலையை குறிக்கிறது. ஆனால் இது எல்லாருக்கும் பொருந்துமா என்று கேட்டால் நிச்சயம் இல்லை.
ஒரு சில ராசியினருக்கு மட்டுமே இந்த வெள்ளி அணிவதால் அவர்களுக்கு அதிர்ஷ்டமும் பொருளாதாரம் முன்னேற்றமும் கிடைக்கும். அப்படியாக ஜோதிட ரீதியாக எந்த ராசியினர் வெள்ளி அணிவதை தவிர்க்க வேண்டும் என்பதை பற்றி பார்ப்போம்.

பொதுவாக கடகம், விருச்சிகம் மற்றும் மீனம் போன்ற நீர் ராசிகள் வெள்ளி அணியும் பொழுது அவர்களுக்கு மனநிலையில் ஒரு நல்ல நேர்மறையான மாற்றங்களும் தன்னம்பிக்கையும் குழப்பமும் இல்லாத நிலையை கொடுக்கும்.
ஆனால் மேஷம், சிம்மம், தனுசு என்கின்ற நெருப்பு ராசிகள் இந்த வெள்ளியை அணியும் பொழுது அவர்களுக்கு பொருளாதார சிக்கலும் மனநிலையில் ஒரு தடுமாற்றமும் உண்டு செய்கிறது.
அதனால் இந்த ராசியில் பிறந்தவர்கள் வெள்ளி அணிய வேண்டும் என்று விருப்பம் கொள்ளும் பொழுது அவர்களுடைய ஜாதகத்தை கொண்டு ஒரு நல்ல ஜாதகரை அனுப்பி தாங்கள் வெள்ளி அணியலாமா என்று ஒரு நல்ல ஆலோசனை பெற்ற பிறகு அவர்கள் அணிந்து கொள்ளும் பொழுது நிச்சயம் அவர்களுக்கு ஒரு நல்ல பலன் கிடைக்கும்.
| ஆன்மீகம்/ஜோதிடம் குறித்த தகவல்களை பெற IBC பக்தி வாட்ஸ் அப் குழுவில் இணைந்து கொள்ளுங்கள். |