சனி பகவானின் முழு ஆசியை பெற போகும் 3 ராசிகள் யார் தெரியுமா?
நம் வாழ்க்கையில் கிரக மாற்றங்களின் பங்கு பெரும் அளவில் இருக்கிறது.ஜோதிட சாஸ்திரத்தின்படி, ஒவ்வொரு கிரகமும்,ஏதாவது ஒரு ராசிக்கு அதிபதி.அதில் மாற்றம் நிகழ்ந்தால் அதற்குரிய அதிர்ஷ்டம் உருவாகும்.தற்போது சனி பகவான் தன்னுடைய ராசியை மாற்றுகிறார்.அதனால் 12 ராசிக்காரர்களும் பல வித பலனை பெற போகிறார்கள்.சனிப்பெயர்ச்சி என்று சொன்னாலே ஒருவித பயம் உண்டாகும்.
ஜாதக ரீதியாக ஏழரை சனி, அஷ்டம சனி, கண்ட சனி, தனி நபர் ஜாதகத்தில் சனி தசை போன்ற காலங்கள் கடுமையான சோதனைகளை ஏற்படுத்தும்.தங்கள் வாழ்க்கையில் ஒருவர் செய்யும் பலன்களுக்கு ஏற்ப சனிபகவான் சோதனைகளை கொடுத்து பாடம் கற்பிக்கிறார்.
பொதுவாக சனிப்பெயர்ச்சி இரண்டரை முதல் 3 ஆண்டுகளுக்கு ஒருமுறை நடக்கும்.இந்நிலையில் பிப்ரவரி 02 ஆம் தேதி சனி பகவான் பூரட்டாதி நட்சத்திரத்தின் இரண்டாம் பாதத்தில் நுழைய உள்ளார்.இதனால் சில ராசிகளுக்கு அதிர்ஷ்டம் காத்திருக்கிறது.அவர்கள் எந்த ராசியினர் என்று பார்ப்போம்.
மேஷம்:
சனியின் நட்சத்திர பெயர்ச்சி மேஷ ராசிக்காரர்களுக்கு மிகவும் சாதகமாக அமைய போகிறது.இவர்கள் எந்த காலகட்டத்தில் எந்த வேலை செய்தாலும் அவர்களுக்கு வெற்றியை கொடுக்கும்.தொழிலில் நல்ல லாபம் உண்டாகும்.சிலருக்கு பதவி உயர்வு கிடைக்கும்.நீண்ட நாள் எதிர்பார்த்த காரியம் ஒன்று வெற்றிகரமாக நடைபெறும்.நினைத்ததை சரியாக செய்து முடிப்பீர்கள்.
துலாம்:
சனியின் நட்சத்திர பெயர்ச்சியால் துலாம் ராசிக்காரர்கள் ஒவ்வொரு துறையிலும் நல்ல வெற்றியைப் பெறுவார்கள்.சமுதாயத்தில் நல்ல மதிப்பும் உயர்வும் கிடைக்கும்.அலுவலகத்தில் சிறப்பாக வேலை செய்வதால் அவர்களுக்கு பாராட்டுக்கள் கிடைக்கும்.சிலருக்கு நற்செய்திகள் தேடி வரும்.குடும்பத்தினருடன் நல்ல நேரம் செலவிடுவீர்கள்.
கும்பம்:
சனியின் நட்சத்திர பெயர்ச்சியால் கும்ப ராசிக்காரர்கள் பிப்ரவரி முதல் வாழ்க்கையில் ஒரு நல்ல மாற்றத்தைக் காண்பார்கள்.நீண்ட ஆண்டுகளாக நிலுவையில் இருந்த பிரச்சனை ஒன்று முடிவிற்கு வரும்.மாணவர்கள் படிப்பில் சிறந்து விளங்குவார்கள்.இத்தனை நாள் தொழில் இருந்த சங்கடம் விலகும்.திருமணத்தில் நல்ல வரன் கிடைக்கும்.
ஆன்மீகம்/ஜோதிடம் குறித்த தகவல்களை பெற IBC பக்தி வாட்ஸ் அப் குழுவில் இணைந்து கொள்ளுங்கள். |