சதுரகிரி கோவிலுக்கு செல்ல பக்தர்களுக்கு 4 நாட்கள் அனுமதி
விருதுநகர் மாவட்டம் மேற்கு தொடர்ச்சி மலையில் சதுரகிரி சுந்தர, சந்தன மகாலிங்கம் கோவில் அமைந்துள்ளது.
இக்கோவிலில் மாதந்தோறும் அமாவாசை, பவுர்ணமி நாட்களில் பக்தர்கள் சென்று வழிபாடு நடத்த அனுமதி வழங்கப்பட்டு வருகிறது.
இந்நிலையில், பிரதோஷம் மற்றும் கார்த்திகை மாத அமாவாசையை முன்னிட்டு பக்தர்கள் மலையேறி சென்று சாமி தரிசனம் செய்ய வருகிற 28ஆம் திகதி முதல் 1ஆம் திகதி வரை 4 நாட்கள் கோவிலுக்கு செல்ல அனுமதி அளித்துள்ளனர்.
பக்தர்கள் காலை 6 மணி முதல் மதியம் 12 மணி வரை மட்டுமே மலையேறி சென்று சாமி தரிசனம் செய்ய அனுமதி வழங்கப்படும்.
மேலும் இரவில் பக்தர்கள் கோவிலில் தங்குவதற்கு அனுமதி கிடையாது. நீரோடை பகுதிகளில் பக்தர்கள் குளிப்பதற்கும் தடை விதிக்கப்பட்டுள்ளது.
அனுமதிக்கப்பட்ட நாட்களில் எதிர்பாராதவிதமாக மழை பெய்தால் பக்தர்களின் பாதுகாப்பை கருத்தில் கொண்டு சாமி தரிசனம் செய்ய அனுமதி மறுக்கப்படும் என வனத்துறையினர் அறிவித்துள்ளனர்.
ஆன்மீகம்/ஜோதிடம் குறித்த தகவல்களை பெற IBC பக்தி வாட்ஸ் அப் குழுவில் இணைந்து கொள்ளுங்கள். |