சனி பிரதோஷத்தை முன்னிட்டு சதுரகிரி மலை ஏறுவதற்கு 4 நாட்கள் அனுமதி
சனி பிரதோஷத்தை முன்னிட்டு சதுரகிரி மலை ஏறுவதற்கு வனத்துறை 4 நாட்கள் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
சதுரகிரி மலை ஏறுவதற்கு அனுமதி
விருதுநகர் மாவட்டத்தில் அமைந்துள்ள வத்திராயிருப்பு அருகில் மேற்கு மலையில் சதுரகிரி சந்தன மாலிங்கம் கோயில் அமைக்கப்பட்டுள்ளது.
இக்கோயிலுக்கு ஒவ்வொரு மாதமும் அமாவாசை மற்றும் பௌர்ணமி நாட்களில் செல்வதற்கு 4 நாட்கள் அனுமதி வழங்கப்படும்.
அந்தவகையில் வருகிற 8 ஆம் திகதி மாத அமாவாசையும் 6 ஆம் திகதி சனி பிரதோஷமும் வருகிறது. இதை முன்னிட்டு 6 - 9 திகதி வரை அதாவது 4 நாட்கள் வரை கோயிலுக்கு செல்வதற்கு பக்தர்களுக்கு வனத்துறை அனுமதியை வழங்கியுள்ளது.
ஆறாம் திகதி நடைபெறவுள்ள பிரதோஷத்தை முன்னிட்டு சுந்தர மகாலிங்கம் சுவாமிக்கு பால், பழம், பன்னீர், இளநீர் உள்ளிட்ட 18 வகையான அபிஷேகங்களும் சிறப்பு பூஜைகளும் நடைபெறவுள்ளது.
மேலும் 60 வயதிற்கு மேற்பட்டவர்களும் 10 வயதிற்கு குறைந்தவர்களும் கோயிலுக்கு வருவது தடை செய்யப்பட்டுள்ளது.
அத்தோடு இரவில் மலையில் தூங்குவதற்கு அனுமதி இல்லை மற்றும் சளி இருமல் போன்ற நோய் இருப்பவர்கள் மலை ஏறுவதை தவிர்த்துக்கொள்ள வேண்டும் என எச்சரிக்கப்பட்டுள்ளது.
மேலும் விரைவில் தீப்பற்றிக் கொள்ளக் கூடிய பொருட்கள் மற்றும் பொலீத்தின் பைகள் ஆகியவை கொண்டு செல்வதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.