நரசிம்மர் ஜெயந்தி 2025: வழிபாடு செய்ய வேண்டிய முக்கியமான கோயில்கள்

By Sakthi Raj May 10, 2025 11:46 AM GMT
Report

 பெருமாள் அவதரித்த தசாவதாரத்தில் நரசிம்மர் அவதாரமும் ஒன்று. நரசிம்மர் மிகவும் சக்தி வாய்ந்த கடவுகளாக பார்க்கப்படுகிறார். அப்படியாக, நரசிம்மர் அவதரித்த தினத்தை நரசிம்ம ஜெயந்தியாக கொண்டாடுகின்றோம். இந்த ஆண்டு நரசிம்மர் ஜெயந்தி மே 11, 2025 அன்று கொண்டாடப்படுகிறது.

தனது பக்தனுக்காக அரக்கன் ஹிரண்யகசிபுவை அழிக்க பாதி மனிதனாகவும், பாதி சிங்கமாகவும் தோன்றினார். மேலும், நரசிம்மர் வைணவத்தில் அழிக்கும் கடவுளாக பார்க்கப்படுகிறார். இவரை வழிபாடு செய்ய நம்முடைய கோபம், அகங்காரம், ஆணவம் எல்லாம் அழிந்து விடும் என்பது நம்பிக்கை.

அப்படியாக, தென்னிந்தியாவின் வழிபாடு செய்யவேண்டிய முக்கிய 4 நரசிம்மர் கோயில்களை பற்றி பார்க்கலாம்.

நரசிம்மர் ஜெயந்தி 2025: வழிபாடு செய்ய வேண்டிய முக்கியமான கோயில்கள் | 4 Important Narasimha Temple In India

1. சீபியில் உள்ள கோயில்:

வணிகர் ஒருவர் கனவில் நரசிம்மரை கண்டதின் அடிப்படையில் அவர் அங்கு ஒரு கோயில் எழுப்ப வேண்டும் என்று எண்ணி கட்டிய கோயில் ஆகும். பின்னர், மூன்று சகோதரர்கள் 18ஆம் நூற்றாண்டில் இதை மிகவும் விரிவாகக் கட்டினர். இந்த கோயில் சுமார் 10 ஆண்டுகளுக்கு மேலாக கட்டப்பட்ட கோயில் ஆகும். இதன் சுவரோவியங்கள் மகாபாரதம், ராமாயணம் போன்றவற்றை சித்தரிக்கின்றன.

2. சோழர் கால மலைக்கோயில்:

இக்கோயில் சுமார் 1000 ஆண்டுகள் பழமை வாய்ந்த கோயிலாகும். இந்த கோயில் நரசிம்மருக்கும் லட்சுமி தேவிக்கும் அர்ப்பணிக்கப்பட்ட கோயில் ஆகும். இந்த கோயில் மிகவும் உயரும் வாய்ந்த கோயில் என்றே சொல்லலாம். அதாவது 750 அடி உயரம் கொண்ட இந்த இந்தக் கோயிலுக்கு 1,300 படிகளை ஏறி செல்ல வேண்டும். இந்த கோயில் சோழர் கட்டிட கலையை உணர்த்தும் கோயில் ஆகும்.

விஜய் தளபதி ஆவார் என்று 30 வருடம் முன்பே கணித்த ஜோதிடர்

விஜய் தளபதி ஆவார் என்று 30 வருடம் முன்பே கணித்த ஜோதிடர்

3. கர்நாடகாவின் மத்தூரில் உள்ள கோயில்:

இது 13ஆம் நூற்றாண்டை சேர்ந்த கோயில் ஆகும். இந்தக் கோயில் ஹொய்சால வம்சத்தின் போது கட்டப்பட்டது. இது நரசிம்மரின் மூர்க்கமான வடிவத்தை பிரதிபலிக்கிறது.

4.வராஹ லட்சுமி நரசிம்ம கோயில் (சிம்மாசலம்):

நரசிம்மர் கோயில்களில் மிகவும் விஷேசமான கோயில் இந்த கோயில் ஆகும். இக்கோயில் சுமார் 11 ஆம் நூற்றாண்டை சேர்ந்த கோயில் என்றே சொல்லலாம். இங்குள்ள நரசிம்மரின் சிலை ஆண்டு முழுவதும் சந்தனப் பசையால் மூடப்பட்டிருக்கும்.  

ஆன்மீகம்/ஜோதிடம் குறித்த தகவல்களை பெற IBC பக்தி வாட்ஸ் அப் குழுவில் இணைந்து கொள்ளுங்கள்.


+91 44 6634 5009
Direct
+91 91500 40056
WhatsApp
bakthi@ibctamil.com
Email US