2025 லட்சுமி நாராயணன் யோகம்:பணமழை எந்த ராசிக்கு?
ஜோதிட கணக்குப்படி பிப்ரவரி 27, 2025 அன்று புதன் மீன ராசியில் இருக்கும் சுக்கிரனுடன் சேர்வதால் லட்சுமி நாராயண யோகம் உருவாகிறது. பின்னர், மே 7, 2025 அன்று புதன் மேஷ ராசிக்கும், மே 31 அன்று சுக்கிரன் மேஷ ராசிக்கும் பெயர்ச்சியாகிறார்கள்.பிப்ரவரி முதல் மே வரையிலான காலம் சில ராசிகளுக்கு மிகவும் நன்மை உண்டாக்கும்.அவை எந்த ராசிக்காரர்கள் என்று பார்ப்போம்.
கடகம்:
கடக ராசிக்கு இந்த லட்சுமி நாராயண யோகம் மிக பெரிய மாற்றத்தை கொடுக்க போகிறது.நிதி நிலையில் ஏற்பட்ட பிரச்சனைகள் படிப்படியாக குறையும்.நண்பர்கள் மற்றும் உறவினர்கள் உங்களுக்கு ஆதரவாக இருப்பார்கள்.குடும்பமாக வெளிநாடு செல்லும் யோகம் உருவாகும்.
மிதுனம்:
புதிய வீடு கட்டும் உருவாகும்.வேலை தேடுபவர்களுக்கு நல்ல பதவி கிடைக்கும்.சரியான நேரத்தில் முதலீடுகள் செய்வீர்கள்.நண்பர்கள் தொழிலில் உங்களுக்கு உதவியாக இருப்பார்கள்.கணவன் மனைவி இடையே சந்தோசம் உருவாகும்.பிரிந்த தம்பதியினர் ஒன்று சேர்வீர்கள்.
கன்னி:
உடல்நிலையில் உண்டான பிரச்சனை சரி ஆகும்.போட்டி தேர்வுகளுக்கு தயார் ஆகும் மாணவர்களுக்கு நல்ல எதிர்காலம் அமையும்.நீண்ட நாள் உருவான கடன்பிரச்சனை முடிவிற்கு வரும்.பெற்றோர்கள் உடல் நலனில் நல்ல மாற்றம் உண்டாகும்.உடன் பிறந்தவர்கள் துணையாக இருப்பார்கள்.
மீனம்:
மீன ராசிக்கு இந்த லட்சுமி நாராயண யோகம் மிக பெரிய மாற்றம் கொடுக்க போகிறது.அரசு அதிகாரிகளுக்கு பதவி உயர்வு கிடைக்கும்.நிலம்,சொத்து விவகாரம் சாதகமாக அமையும்.வியாபாரத்தில் நீங்கள் எதிர்பார்த்த லாபம் உண்டாகும்.வறுமை விலகி செல்வம் பெருகும்.
ஆன்மீகம்/ஜோதிடம் குறித்த தகவல்களை பெற IBC பக்தி வாட்ஸ் அப் குழுவில் இணைந்து கொள்ளுங்கள். |