இன்று ராம நவமி அன்று சொல்ல வேண்டிய சக்தி வாய்ந்த 4 மந்திரங்கள்
மகாவிஷ்ணுவின் தசாவதாரத்தின் ஏழாவது அவதாரமாக ஸ்ரீ ராம அவதாரம் இருக்கிறது. தெய்வம் மனிதராக பிறந்தாலும் துன்பம் வருவது இயல்பு என்பதை உணர்த்திய மற்றும் தர்மத்தோடு வாழ்ந்த ஒரு அவதாரம் ஆகும்.
அப்படியாக ராமர் அவதரித்த அந்த திருநாளை நாம் ராமநவமி என்று கொண்டாடுகின்றோம். 2026-ஆம் ஆண்டு ராமநவமி மார்ச் 27 அன்று வருகிறது. இந்த நாளில் நாம் விரதம் இருந்து ஸ்ரீ ராமரை மனதார வழிபாடு செய்தால் ஸ்ரீ ராமபிரானின் முழு அருளால் நம் வாழ்க்கையில் இருக்கக்கூடிய கவலைகள் யாவும் விலகி வெற்றிகள் நம்மை தேடி வரும்.
அந்த வகையில் ஸ்ரீ ராம நவமி அன்று நாம் ஸ்ரீ ராமபிரானின் முழு அருளை பெற பாட வேண்டிய சக்தி வாய்ந்த 4 மந்திரங்களை பற்றி பார்ப்போம்.

1. "ராமாய ராமபத்ராய ராமச்சந்த்ராய வேதஸே
ரகுநாதாய நாதாய ஸீதாயாஹ படயே நமஹ்"
இந்த மந்திரத்தை தொடர்ந்து பாராயணம் செய்பவர்களுக்கு மனதில் கவலை இருக்காது. ஸ்ரீ ராமபிரானுடைய அருளால் நம்பிக்கையோடு எதையும் செய்து வெற்றி பெறுவார்கள். இந்த மந்திரம் நம்முடைய வாழ்க்கையில் நிலைத்தன்மையையும் தேவை இல்லாத பயத்தை நீக்கி மன உறுதியை கொடுக்கிறது.
2. "ஓம் தாசரதயே வித்மஹேசீதா வல்லபாய தீமஹிதன்னோ ராமஹ் பிரச்சோதயாத்"
இது ஸ்ரீ ராமரின் காயத்ரி மந்திரம். இந்த மந்திரத்தை நாம் பாராயணம் செய்வதால் ஸ்ரீ ராமபிரான் மற்றும் சீதை பிராட்டியின் முழு அருளை பெற்று மன நிம்மதி அடைகின்றோம்.

3. "ராம ராமாய நமஹ"
மிகவும் எளிமையான இந்த மந்திரத்தை தொடர்ந்து பாராயணம் செய்யும் பொழுது நம்முடைய ஆன்மீக சிந்தனை வலுவடைகிறது. குடும்பத்தில் இருக்கக்கூடிய சண்டை விலகுகிறது. புதிய வீடு வாகனம் வாங்கக்கூடிய யோகம் கிடைத்து வாழ்க்கையில் மிகப் பெரிய அதிர்ஷ்டம் தேடி வருகிறது.
4. "ஸ்ரீ ராம் ஜெய் ராம் ஜெய் ஜெய் ராம்"
இந்த மந்திரம் மிகவும் சக்தி வாய்ந்து. இந்த மந்திரத்தை தொடர்ந்து பாராயணம் செய்வதால் எதிர்காலத்தில் வர இருக்கின்ற பிரச்சனைகளிலிருந்து நம்மை காப்பாற்றுவதோடு தொழில் வாழ்க்கை இல்லற வாழ்க்கை போன்ற எல்லாவற்றிலும் சிறந்து விளங்க கூடிய ஆசீர்வாதத்தை ஸ்ரீ ராமர் நமக்கு வழங்குகிறார்.
மேலும், ராம நவமி அன்று ஜெப மாலையில் இந்த மந்திரத்தை குறைந்தது ஐந்து முறையாவது உச்சரித்தால் வாழ்க்கையில் அதிர்ஷ்டம் தேடி வரும்.
| ஆன்மீகம்/ஜோதிடம் குறித்த தகவல்களை பெற IBC பக்தி வாட்ஸ் அப் குழுவில் இணைந்து கொள்ளுங்கள். |