உங்களின் கர்ம வினை குறைகிறது என்பதை உணர்த்தும் 4 அறிகுறிகள்

By Sakthi Raj Mar 08, 2026 11:36 AM GMT
Report

கர்ம வினை என்பது நாம் முன் ஜென்மங்களில் செய்த பாவ புண்ணியங்கள் மற்றும் இந்த பிறவியில் செய்து கொண்டிருக்கின்ற பாவ புண்ணிய கணக்குகள் அடிப்படையில் செயல்படக்கூடிய ஒன்றாகும். அதாவது இந்த உலகத்தில் நாம் எதை செய்கின்றோமோ மீண்டும் அது நம்மை வந்து அடையும் என்பதுதான் நியதி.

மேலும் ஒருவருக்கு கர்ம வினையின் தாக்கம் அதிகமாக இருந்தால் அவர்கள் நிறைய பாவங்கள் தவறுகள் செய்யக்கூடும். ஆனால் காலம் கடந்து அவர்களுடைய தவறை உணரும் பொழுது அந்த கர்மவினையின் கெடு பலன்களும் குறைந்து விடும். அப்படியாக ஒருவருடைய கர்ம வினை ஆனது குறைந்து வருகிறது என்பதை அவர்கள் எவ்வாறு தெரிந்து கொள்வது என்பதை பற்றி பார்ப்போம்.

உங்களின் கர்ம வினை குறைகிறது என்பதை உணர்த்தும் 4 அறிகுறிகள் | 4 Symptoms That One Lossing Their Bad Karma

வாஸ்து: வீடுகளில் என்ன செடிகள் வளர்க்கலாம்? வளர்க்கக்கூடாது

வாஸ்து: வீடுகளில் என்ன செடிகள் வளர்க்கலாம்? வளர்க்கக்கூடாது

1. பெரும்பாலான பாவங்கள் அவர்கள் தன்னிலை மறந்து இருக்கின்ற நேரத்தில் தான் நடக்கிறது. அதாவது ஒரு மனிதன் தெளிவில்லாத பொழுது அவன் செய்வதறியாது செயல்களை செய்து விடுகின்றான்.

காரணம் அங்கு அவளுக்கு கர்ம வினை தாக்கமானது அதிக அளவில் இருப்பதின் அறிகுறியாகும். அப்படியாக, ஒருவரின் பாவங்கள் மற்றும் கர்ம வினை கணக்குகள் குறைகிறது என்றால் அவர்கள் தெளிவடைந்து விடுவார்கள்.

எதற்காக ஒரு செயலை செய்கின்றோம்? இந்த செயலை செய்தால் எவரும் காயப்படுவார்களா என்கின்ற விழிப்புணர்வு அவர்களுக்கு இயல்பாக வந்துவிடும். அதன் பிறகு எந்த ஒரு தவறுகளோ அல்லது பாவ செயல்களிளோ அவர்கள் ஈடுபட மாட்டார்கள்.

2. யாராவது உங்களை காயப்படுத்தினால் நீங்கள் அவர்களை விரைவில் மன்னித்து விடுவீர்கள். எவர் எப்படியோ அவர்களை அந்த நிலையில் இருந்து ஏற்றுக் கொள்ள பழகி விடுவீர்கள்.

யாருக்கும் சாபம் விட மாட்டீர்கள். நன்மை தீமை எது நடந்தாலும் உங்கள் மனநிலையில் மாற்றம் இருக்காது. நீங்கள் நீண்ட நேரம் கோபத்துடன் இருக்க மாட்டீர்கள். எளிதில் மறந்து அதை கடந்து செல்ல பழகிக் கொள்வீர்கள்.

உங்களின் கர்ம வினை குறைகிறது என்பதை உணர்த்தும் 4 அறிகுறிகள் | 4 Symptoms That One Lossing Their Bad Karma

இந்த ராசியில் பிறந்த பெண்கள் சிறந்த மனைவிகளாக இருப்பார்களாம்

இந்த ராசியில் பிறந்த பெண்கள் சிறந்த மனைவிகளாக இருப்பார்களாம்

3. அதைப்போல் செய்கின்ற செயல்களில் உங்களுடைய எதிர்பார்ப்புகள் குறைந்துவிடும். உங்களுடைய கடமையை செய்வதில் நீங்கள் முக்கியத்துவம் காட்டுவீர்கள். ஆனால், அதற்கான பலனை எதிர்பார்க்க மாட்டீர்கள்.

இன்று செய்யக்கூடிய கடமைக்கு இன்றைய நாளில் பாராட்டுக்கள் கிடைக்கவில்லை என்றாலும் என்றோ ஒரு நாள் நிச்சயம் நமக்கு அங்கீகாரம் கிடைக்கும் என்கின்ற ஒரு நம்பிக்கை பிறக்கும்.

4. குறிப்பாக சுயநலமாக எந்த இடத்திலும் நீங்கள் செயல்பட மாட்டீர்கள். நிறைய இடங்களில் விட்டுக் கொடுத்து செல்ல முயல்வீர்கள். உங்களுக்கு கடினமாகவே இருந்தாலும் அதனால் ஒருவர் நன்மை அடைகிறார்கள் என்றால் அதைச் செய்ய துணிவீர்கள். 

ஆன்மீகம்/ஜோதிடம் குறித்த தகவல்களை பெற IBC பக்தி வாட்ஸ் அப் குழுவில் இணைந்து கொள்ளுங்கள்.


+91 44 6634 5009
Direct
+91 91500 40056
WhatsApp
bakthi@ibctamil.com
Email US