மார்ச் 29க்கு பிறகு சனியின் பிடியில் சிக்க போகும் ராசிகள் யார்?
ஜோதிட சாஸ்திரத்தின் படி,சனி பகவான் இரண்டரை ஆண்டுகளுக்கு ஒருமுறை அவருடைய ராசி மாற்றுகிறார்.அப்படியாக சனிபகவான் அவருடைய ராசியை மாற்றும் பொழுது ஒரு ராசிக்கு நல்ல பலன்களும் ஒரு சில ராசிகளுக்கு அசுப பலன்களும் கொடுக்கிறார்.அந்த வகையில் வருகின்ற 2025 சனிப் பெயர்ச்சியின் தாக்கம் எந்த ராசிகளில் இருக்கிறதோ, அந்த ராசிக்காரர்களுக்குத்தான் அதிக சிரமம் ஏற்படும்.
2025 ஆம் ஆண்டில், மார்ச் 29 ஆம் தேதி சனி கும்ப ராசியிலிருந்து மீன ராசிக்கு பெயர்ச்சி ஆகும். இதனால், 5 ராசிக்காரர்களுக்குக் கஷ்டங்கள் தொடங்குகிறது.அந்த 5 ராசிகள் யார் என்பதை பார்ப்போம்.
மேஷம்:
மேஷ ராசிக்காரர்களுக்கு ஏழரை சனி தொடங்க உள்ளது.அது இரண்டரை ஆண்டுகள் நீடிக்கும்.இந்த காலம் மிகவும் கவனமாக இருக்கவேண்டிய காலம் ஆகும்.இந்த காலகட்டத்தில் தேவை இல்லாத வீண் பேச்சு வாக்குவாதங்களில் ஈடுபடுவதை குறைக்கவும்.பிறரை நம்பி பணம் கொடுப்பதை தவிர்க்க வேண்டும்.
மீனம்:
மீன ராசிக்காரர்களுக்கு ஏழரை நாட்டுச் சனியின் இரண்டாம் பகுதி என்பதால் அவர்கள் அந்த இரண்டு ஆண்டுகள் பல்வேறு பிரச்சனைகளை சாந்திக்கூடும்.இது அவர்களின் உடல்நிலையை மிக மோசமாக பாதிக்கும்.சிலருக்கு குடும்பத்தில் ஏற்படும் பிரச்சனையால் மன அழுத்தம் ஏற்பட வாய்ப்புகள் உள்ளது.
கும்பம்:
கும்ப ராசிக்கு ஏழரை நாட்டுச் சனியின் கடைசிப் பகுதி என்பதால் இரண்டு விதமான பலன்களை கொடுக்கும்.இந்த காலகட்டத்தில் எந்த ஒரு முக்கியமான முடிவுகள் எடுக்காமல் இருப்பது நல்லது.உங்களுக்கு விருப்பம் இல்லாத சில வேலையை செய்யும் சூழ்நிலை உருவாகும்.அதனால் மனஉளைச்சல் உண்டாகும்.
சிம்மம்:
சிம்ம ராசிக்காரர்களுக்கு மார்ச் 29 அன்று சனி பெயர்ச்சி தொடக்கம் முதல் சனியின் தாக்கம் தொடங்கும்.இதனால் அவர்களுக்கு பண பிரச்சனை அதிகரிக்கும்.வியாபாரத்தில் சில நெருக்கடிகள் சந்திக்கக்கூடும்.சிலருக்கு சொந்த இடத்தை விட்டு வேறு இடம் மாற வாய்ப்புகள் உள்ளது.கணவன் மனைவி இடையே கருத்து வேறுபாடுகள் இருக்கும்.கவனமாக இருக்கவேண்டும்.
ஆன்மீகம்/ஜோதிடம் குறித்த தகவல்களை பெற IBC பக்தி வாட்ஸ் அப் குழுவில் இணைந்து கொள்ளுங்கள். |