2026 ராமநவமி: வாழ்க்கையில் திடீர் மாற்றங்களை பெறப்போகும் 4 முக்கிய ராசிகள்

By Sakthi Raj Mar 26, 2026 07:04 AM GMT
Report

ஜோதிட சாஸ்திரத்தில் ஒவ்வொரு ஆண்டும் சித்திரை மாதத்தில் சுக்ல பட்சத்தில் (வளர்பிறை) ராம நவமி கொண்டாடப்படுகிறது. அந்த வகையில் இந்த ஆண்டு ராம நவமி மார்ச் 26 ஆம் தேதி அன்று அனுஷ்டிக்கப்படுகிறது. சுமார் இரண்டு நாட்களுக்கு நீட்டிக்கக்கூடிய இந்த நவமி திதியின் இடையே தற்செயலாக சித்திரை சுக்ல அஷ்டமி திதியும் இணைகிறது.

இன்று சர்வார்த்த சித்தி யோகம் மற்றும் வரிஷ்ட யோகமும் கஜகேசரி யோகத்துடன் இணைந்து உருவாகிறது. இந்த தாக்கம் குறிப்பிட்ட சில ராசிகளுக்கு ஏற்பட்டு முக்கியமாக நான்கு ராசிகள் மிகப்பெரிய அளவில் நன்மை பெறப்போகிறார்கள். அவர்கள் எந்த ராசியினர் என்று பார்ப்போம்.

மிதுனம்:

மிதுன ராசிக்காரர்களுக்கு வாழ்க்கையில் ஏற்பட்ட தடைகளை உடைக்க போகிறது. வேலை செய்யும் இடங்களில் சந்தித்து வந்த பிரச்சனைகளில் இருந்து விடுபட போகிறீர்கள். ஆன்மீகம் தொடர்பான விஷயங்களில் உங்களுக்கு ஆர்வம் அதிகரிக்கும். காதல் வாழ்க்கையில் சந்தித்து வந்த மனக்கசப்புகளும் வாழ்க்கைத் துணையுடன் ஏற்பட்ட விரிசலும் விலகப் போகிறது.

கடகம்:

கடக ராசிக்காரர்களுக்கு வீடுகளில் சுபகாரிய நிகழ்ச்சிகள் தேடி வரும். தொழில் செய்யும் இடத்தில் உங்களிடம் முக்கிய நபர்கள் ஆலோசனை கேட்டு நடந்து கொள்வார்கள். அலுவலகத்தில் உங்களுடைய மதிப்பு உயரும். தேவையில்லாத கவலைகள் விலகக்கூடிய காலகட்டம். கடன் பிரச்சினை விலகி சுபகாரிய நிகழ்வுகள் நடைபெறும்.

துலாம்:

துலாம் ராசிக்காரர்களுக்கு மனதில் நீண்ட நாட்கள் இருந்து வந்து குழப்பங்கள் விலகப் போகிறது. குடும்ப வாழ்க்கையில் இவர்கள் ஒழுக்கத்தையும் குடும்பத்தில் ஒரு நல்ல உறவு முறையையும் வளர்த்துக் கொள்ளப் போகிறார்கள். திருமணம் முடிந்தவர்களுக்கு நிச்சயம் குழந்தை வரம் கிடைக்கப் போகிறது. குழந்தைகளின் எதிர்கால தேவைக்காக சில முக்கிய முடிவுகளை எடுப்பீர்கள்.

கும்பம்:

கும்ப ராசிக்காரர்களுக்கு மிகச்சிறந்த பொன்னான காலமாகவே அமையப் போகிறது. போட்டி தேர்வுகளில் மாணவர்கள் நல்ல மதிப்பெண் பெறுவார்கள். வேலை செய்யும் இடங்களில் உங்களுக்கு இருந்து வந்த மனக்கசப்புகள் விலகப்போகிறது. சுய தொழில் தொடங்க வேண்டும் என்ற ஆர்வம் உண்டாகும். திரை துறை மற்றும் கலை துறையில் இருப்பவர்களின் திறமைகள் வெளிப்பட போகிறது. நீண்ட நாள் நினைத்துக் கொண்டிருந்த அங்கீகாரம் கிடைக்கப்போகிறது.

ஆன்மீகம்/ஜோதிடம் குறித்த தகவல்களை பெற IBC பக்தி வாட்ஸ் அப் குழுவில் இணைந்து கொள்ளுங்கள்.

 

+91 44 6634 5009
Direct
+91 91500 40056
WhatsApp
bakthi@ibctamil.com
Email US