இந்த ராசியில் பிறந்தவர்கள் மூளைக்கு ஓய்வே குடுக்க மாட்டார்களா யார் தெரியுமா?
நம்மை சுற்றி ஒரு சிலரை பார்த்திருப்போம். இப்பொழுதும் ஏதேனும் சிந்தித்துக் கொண்டே இருப்பார்கள். அவர்களால் ஒரு நிமிடம் கூட சிந்திக்காமல் இருக்க முடியாது. ஏதேனும் தவறுகள் நடந்து விடுமோ என்று அவர்களாகவே ஒரு பயத்தை உருவாக்கிக் கொண்டு எப்பொழுதும் சிந்தித்துக் கொண்டிருப்பதில் அவர்கள் ஓய மாட்டார்கள்.
அப்படியாக, எந்த ராசியினர் தன்னுடைய மூளைக்கு ஓய்வையே கொடுக்காமல் யோசித்துக் கொண்டே இருப்பார்கள் என்பதை பற்றி பார்ப்போம்.

கன்னி:
கன்னி ராசிக்காரர்கள் தங்களுடைய வாழ்க்கையில் எந்த தவறும் நடந்துவிடக்கூடாது என்பதற்காக எப்பொழுதும் ஏதேனும் ஒரு விஷயத்தை சிந்தித்துக் கொண்டே இருப்பார்கள். அது சிறு விஷயமாக இருந்தாலும் கூட அவர்கள் அதில் அதிக கவனம் செலுத்துவதால் அவர்கள் மூளை எப்போதும் இயங்கிக் கொண்டே இருக்கிறது.
விருச்சிகம்:
இவர்கள் பார்ப்பதற்கு வெளியே தைரியமாக காட்டிக் கொண்டாலும் உள்ளுக்குள் இவர்கள் நிறைய விஷயங்களை யோசித்துக்கொண்டே இருப்பார்கள். ஆதலால் இவர்களுடைய மூளை எப்பொழுதும் இயங்கிக் கொண்டே இருக்கிறது. ஒரு நிமிடத்தில் பல விஷயங்களை இவர்கள் யோசித்து முடித்து விடக் கூடியவர்கள்.
கடகம்:
இவர்கள் குடும்பத்திற்கு எப்பொழுதும் அதிக அளவில் முக்கியத்துவம் கொடுப்பார்கள். குடும்பத்தினுடைய எதிர்காலத்தை கருத்தில் கொண்டு இவர்கள் எப்பொழுதும் அதனை பற்றிய சிந்தனைகளை இருப்பார்கள். அதனால் இவர்கள் மூளை எப்போதும் இயங்கிக் கொண்டிருக்கிறது. அதற்கு ஓய்வே அவர்கள் கொடுக்க மாட்டார்கள்.
மீனம்:
இவர்களை ஒரு சிறிய பிரச்சனையாக இருந்தாலும் அதை பெரிய அளவில் சந்தித்துக் கொண்டிருப்பவர்கள். அதுமட்டுமல்லாமல் ஒரு விஷயம் நல்ல முடிவை பெறுகின்றது என்றாலும் அது அவர்கள் நம்பிக்கை கொள்ளாமல் பயத்தினால் அந்த விஷயத்தை பற்றி மறுபடியும் சிந்தித்து யோசித்துக் கொண்டே இருக்கக்கூடியவர்கள்.
| ஆன்மீகம்/ஜோதிடம் குறித்த தகவல்களை பெற IBC பக்தி வாட்ஸ் அப் குழுவில் இணைந்து கொள்ளுங்கள். |