இடத்தை மாற்றும் சனி.., இந்த 4 நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் அதிர்ஷ்டம் பெறுவார்கள்
நவகிரகங்களில் நீதிமனாக விளங்கக்கூடியவர் சனி பகவான்.
சனி பகவான் செய்யும் செயலுக்கு ஏற்ப பிரதிபலன்களை திருப்பி கொடுக்கக்கூடியவர்.
தற்போது பூரட்டாதி நட்சத்திரத்தில் இருக்கும் சனிபகவான் ஏப்ரல் 27ஆம் திகதி சனிபகவான் உத்திரட்டாதி நட்சத்திரத்தில் நுழைகிறார்.
சனிபகவான் தன்னுடைய சொந்த நட்சத்திரத்திற்கு மாறும்போது குறிப்பிட்ட 4 நட்சத்திரங்களில் பிறந்தவர்கள் நற்பலன்களை அனுபவிக்கப்போகிறார்கள்.
மிருகசீரிஷம் நட்சத்திரம்
சிறப்பான பலன்களை அடைய வாய்ப்பு உள்ளது. பதவி உயர்வு, இடமாற்றம் அல்லது புதிய பொறுப்புகள் அவர்களை தேடி வரலாம். அவர்கள் கடினமாக உழைத்து விஷயங்களை சரியாகக் கையாண்டால், அவர்கள் மிகப்பெரிய சாதனைகளை செய்ய முடியும். அவர்கள் நிதி விஷயங்களில் பெரிய வெற்றியை அடைய முடியும். புதிய முதலீடுகளைச் செய்வதற்கு இந்த நேரம் சாதகமாக இருக்கும். குடும்ப உறவுகள் மகிழ்ச்சியாக இருக்கும். ஆரோக்கியம் மேம்படும்.
திருவாதிரை நட்சத்திரம்
இந்த காலகட்டத்தில் தொழில்முறை மற்றும் தனிப்பட்ட சாதனைகளை அடைய வாய்ப்பு உருவாகும். பணியிடத்தில் கடினமாக உழைப்பதற்கான பலன்கள் கிடைக்கும். அதிக கடமைகளும் பொறுப்புகளும் உங்களைத் தேடி வரும். பொருளாதாரநிலையை வலுப்படுத்துவதற்கான வாய்ப்புகள் கிடைக்கும். அவர்களின் கடந்த கால பணப்பிரச்சினைகள் இப்போது முடிவுக்கு வரும். குடும்ப வாழ்க்கையில் அன்பும், மகிழ்ச்சியும் அதிகரிக்கும். சமூகத்தில் நற்பெயரும், மரியாதையும் அதிகரிக்கும்.
உத்திராடம் நட்சத்திரம்
இந்த காலகட்டத்தில் சிறப்பான வெற்றியை அடையலாம். தொழிலில் லாபம் அதிகரிக்கும், கடன் பிரச்சினைகளை தீர்க்கும் யோகம் உருவாகும். இந்த ராசிக்காரர்கள் வாழ்க்கையில் தாங்கள் விரும்பும் பல விஷயங்களை இந்த காலகட்டத்தில் அடைய முடியும். மனதில் இருந்த போராட்டங்கள் முடிவுக்கு வந்து இப்போது மகிழ்ச்சி திரும்பும். குடும்பத்தில் மகிழ்ச்சியும் அமைதியும் நிறைந்த சூழல் நிலவும். வெளிநாடு செல்ல விரும்புபவர்களுக்கு இப்போது அதற்கான வாய்ப்புகள் பிரகாசமாகும்.
திருவோணம் நட்சத்திரம்
தனிப்பட்ட வாழ்க்கையில் பெரிய முன்னேற்றம் ஏற்படும். திருமண வாழ்வில் மகிழ்ச்சியும் அமைதியும் நிலவும். அவர்களின் நீண்டகால ஆசைகள் ஒவ்வொன்றாக நிறைவேறும். நிதி நிலை எதிர்பார்த்ததை விட சிறப்பாக இருக்கும். அதிக செலவு செய்யாமல் பணத்தை மிச்சப்படுத்த முடியும். மாணவர்களுக்கு இந்த காலகட்டம் சிறப்பாக இருக்கும், அவர்கள் படிப்பில் சிறப்பாக செயல்பட்டு பெரிய சாதனைகளை செய்வார்கள்.'
ஆன்மீகம்/ஜோதிடம் குறித்த தகவல்களை பெற IBC பக்தி வாட்ஸ் அப் குழுவில் இணைந்து கொள்ளுங்கள். |