வீட்டில் பிரச்சனை நிரந்தரமாக தீர குலதெய்வத்தை இந்த முறையில் வழிபாடு செய்யுங்கள்
குலதெய்வ வழிபாடு என்பது மிகவும் முக்கியமானதாக பார்க்கப்படுகிறது. குலதெய்வத்தை தொடர்ந்து வழிபாடு செய்பவர்கள் நிச்சயம் வாழ்க்கையில் ஏற்படக்கூடிய சிறு சிறு தொந்தரவுகள் முதல் பெரிய அளவில் இருக்கக்கூடிய சிக்கல்கள் வரை முழுமையாக விலகுவதை நாம் பார்க்க முடிகிறது.
அப்படியாக, வீடுகளில் ஏற்படக்கூடிய பிரச்சனை நிரந்தரமாக மற்றும் உடனடியாக விலகுவதற்கு செய்ய வேண்டிய குலதெய்வ பரிகாரத்தை பற்றி பார்ப்போம்.

உங்கள் குலதெய்வ ஆலயம் வீட்டுக்கு அருகில் இருந்தால் தினம் தோறும் குளித்துவிட்டு தொடர்ந்து 48 நாட்கள் குலதெய்வம் ஆலயத்திற்கு சென்று நீங்கள் தீபம் ஏற்றி வழிபாடு செய்து வாருங்கள்.
ஒரு வேளை குலதெய்வம் உங்கள் வீட்டிற்கு வெகு தொலைவில் இருந்தால் குலதெய்வ படத்தை வீடுகளில் பூஜை அறையில் வைத்து 48 நாட்கள் தினம் தோறும் தீபம் ஏற்றி வழிபாடு செய்யுங்கள். முடிந்த நெய்வேத்தியமும் வீடுகளில் நீங்கள் படைக்கலாம்.

இவ்வாறு தொடர்ந்து 48 நாட்கள் நாம் குலதெய்வத்திற்கு நம்முடைய நேரத்தை ஒதுக்கி வழிபாடு செய்துவர நிச்சயம் நீங்கள் உடனடியாக உங்கள் வாழ்க்கையில் ஒரு நல்ல மாற்றத்தை காணலாம். பலரும் நம்முடைய வாழ்க்கையில் ஏதேனும் பிரச்சனை என்றால் இஷ்ட தெய்வத்தை தான் முதலில் நோக்கி செல்கிறார்கள்.
ஆனால், இஷ்ட தெய்வம் நமக்கு கை கொடுத்தாலும் குலதெய்வம் போல் நம்மை இக்கட்டான நிலையில் வந்து காக்கக்கூடிய தெய்வம் எவருமில்லை என்பதை நாம் முதலில் தெரிந்து கொள்ள வேண்டும்.
ஆதலால், பிரச்சனை என்று வருகின்ற பொழுது முதலில் குலதெய்வத்தை சரணடையுங்கள். குலதெய்வத்தை மனதார நினையுங்கள். வாழ்க்கை படிப்படியாக மாறுவதை பார்க்கலாம்.
| ஆன்மீகம்/ஜோதிடம் குறித்த தகவல்களை பெற IBC பக்தி வாட்ஸ் அப் குழுவில் இணைந்து கொள்ளுங்கள். |