வீட்டில் எதிர்மறை ஆற்றல்கள் விலக வேண்டுமா? கார்த்திகை மாதத்தில் இப்படி தீபம் ஏற்றுங்கள்

By Sakthi Raj Nov 19, 2026 07:50 AM GMT
Report

பொதுவாக, கார்த்திகை மாதம் என்றாலே பக்தி, விரதம் ஆகியவற்றை கடைபிடிக்க கூடிய ஒரு மாதம் மட்டுமல்ல இது விளக்கு ஏற்றி வழிபாடு செய்யக்கூடிய ஒரு சிறப்பான மாதமாக கருதப்படுகிறது. அதாவது சிவபெருமான் ஜோதி பிளம்பாக காட்சி அளித்த மாதம் என்பதால் இறைவனை நாம் ஜோதி வடிவமாக வழிபாடு செய்வதற்குரிய மாதமாகும்.

மேலும், கார்த்திகை மாதம் விளக்கேற்றி வழிபாடு செய்வது என்பது மிகவும் புண்ணியமான வழிபாடாக பார்க்கப்படுகிறது. கார்த்திகை மாதம் முழுவதும் காலை, மாலை ஆகிய இரு நேரங்களிலும் வீட்டு நிலை வாசலில் மண் அகல் விளக்கில் நல்லெண்ணெய் அல்லது நெய் போற்றி தீபம் ஏற்றி வழிபாடு செய்வது பெரும்பாலான வீடுகளில் வழக்கமாக வைத்திருக்கக்கூடிய ஒன்றாக இருக்கிறது.

அவ்வாறு செய்ய முடியாதவர்கள் கூட திருக்கார்த்திகை தீபத்திருநாள் துவங்கி அடுத்து வருகின்ற 3 அல்லது 5 நாட்களுக்கு வீடு முழுவதும் தீபம் ஏற்றி வழிபாடு செய்யலாம்.

வீட்டில் எதிர்மறை ஆற்றல்கள் விலக வேண்டுமா? கார்த்திகை மாதத்தில் இப்படி தீபம் ஏற்றுங்கள் | 5 Benefits Of Lighting Lamps At Home Entrance

2027-ல் மூன்று முறை இடம் மாறும் குரு பகவான்.. அதிர்ஷ்டம் பெறப்போகும் 3 ராசிகள் யார்?

2027-ல் மூன்று முறை இடம் மாறும் குரு பகவான்.. அதிர்ஷ்டம் பெறப்போகும் 3 ராசிகள் யார்?

பொதுவாக, கார்த்திகை மாதம் முழுவதுமே நிலைவாசல், பூஜை அறை, துளசி மாடம் ஆகிய இடங்களில் ஒரே ஒரு அகல் விளக்காவது ஏற்றி வைப்பது என்பது நமக்கு புண்ணியத்தை சேர்த்து கொடுக்கும் என்று பெரியவர்கள் சொல்வது உண்டு.

அந்த வகையில் கார்த்திகை மாதம் வீட்டின் நிலை வாசலில் தீபம் ஏற்றி வைத்தால் என்னென்ன நன்மைகள் கிடைக்கும் என்பதை பற்றி தெரிந்து கொள்வோம்.

கார்த்திகை மாதத்தில் வீட்டின் நிலைவாசலில் தீபம் ஏற்றுவதன் பலன்கள் :

1. மஹாலக்ஷ்மியின் அருள்:

கார்த்திகை மாதம் நிலை வாசல் இருபுறமும் இரண்டு அகல் விளக்குகள் ஏற்றுவதன் வழியாக வீடுகளில் நேர்மறை ஆற்றல் அதிகரித்து மகாலட்சுமி மற்றும் குலதெய்வத்தின் பரிபூரண அருள் நமக்கு கிடைக்கும்.

2. பணக் கஷ்டம் விலகும்:

இந்த மாதத்தில் நிலை வாசலில் விளக்கேற்றி மனதார வேண்டிக் கொள்கின்ற பொழுது குடும்பத்தில் இருக்கக்கூடிய வறுமை பணக்கஷ்டம் விலகிப் பொருளாதாரத்தில் நல்ல முன்னேற்றம் கிடைக்கும் என்பது நம்பிக்கை.

வீட்டில் எதிர்மறை ஆற்றல்கள் விலக வேண்டுமா? கார்த்திகை மாதத்தில் இப்படி தீபம் ஏற்றுங்கள் | 5 Benefits Of Lighting Lamps At Home Entrance 

3. யாகம் செய்த பலன்:

கார்த்திகை மாதம் முழுவதும் மாலை நேரத்தில் விளக்கேற்றி வழிபாடு செய்வது என்பது அக்னி பகவான் வழியாக இறைவனுக்கு அவிரீபாகம் அளிக்கும் பெரும் யாகம் செய்ததற்கு நிகரான புண்ணியத்தை பெற்றுக் கொடுக்கும்.

4. தீய எண்ணங்கள் விலகும்:

தீபம் என்பது நம்முடைய இருளை நீக்கி ஒளியை வரவேற்பதன் அடையாளமாக இந்த தீபங்கள் ஏற்றப்படுகின்றன. இது நம்முடைய வீட்டிலும் மனதிலும் இருக்கக்கூடிய தீய எண்ணங்களையும் இருளையும் போக்குகிறது.

மேலும், குளிர் காலத்தில் தொடக்க மாதமான கார்த்திகை மாதத்தில் வாசலில் விளக்கேற்றி வைப்பதால் அங்கு இருக்கக்கூடிய கிருமிகள் அழிகிறது. மேலும், ஆன்மீக நம்பிக்கையின் அடிப்படையில் வீட்டு நிலை வாசல் என்பது குலதெய்வம் குடியிருக்க கூடிய இடமாகவே கருதப்படுகிறது.

வீட்டில் எதிர்மறை ஆற்றல்கள் விலக வேண்டுமா? கார்த்திகை மாதத்தில் இப்படி தீபம் ஏற்றுங்கள் | 5 Benefits Of Lighting Lamps At Home Entrance

2026: டிசம்பரில் கடக ராசிக்கு உருவாகும் குரு மங்கள யோகம்.. இழந்ததை பெரும் காலம் வந்துவிட்டது

2026: டிசம்பரில் கடக ராசிக்கு உருவாகும் குரு மங்கள யோகம்.. இழந்ததை பெரும் காலம் வந்துவிட்டது

அதனால், நாம் நிலை வாசலில் அமரக்கூடாது என்று பெரியவர்கள் சொல்வதுண்டு. அதைப்போல், நிலை வாசலை எப்பொழுதும் நாம் சுத்தமாக வைத்திருக்க வேண்டும். நிலை வாசலில் குறுக்கே எந்த பொருட்களையும் வைக்க கூடாது.

மேலும், ஒருவருடைய வீடுகளில் குலதெய்வத்தினுடைய பரிபூரண அருள் இருந்தால் மட்டுமே அந்த வீட்டில் பிற தெய்வங்களுடைய அருளை நாம் பெறலாம். ஆக, வீட்டில் எதிர்மறை ஆற்றல்கள் விலகி கஷ்டங்கள் நீங்கி நன்மைகள் அதிகரிக்க நிலைவாசலில் விளக்கேற்றி வைப்பது நமக்கு அளவில்லாத நன்மைகளை பெற்றுக் கொடுக்கும் என சொல்லப்படுகிறது.   

Disclaimer:

இக்கட்டுரையில் இடம்பெற்றுள்ள வழிபாடு மற்றும் விரத முறைகள் ஆன்மிக நம்பிக்கைகள், பாரம்பரிய நடைமுறைகளின் அடிப்படையில் பொதுத் தகவலுக்காக வழங்கப்பட்டுள்ளன. குடும்ப வழக்கம் மற்றும் கோயில் மரபுகளுக்கு ஏற்ப நடைமுறைகள் மாறுபடலாம். உடல் ஆரோக்கிய பிரச்சனை இருப்பவர்கள் விரதம் மேற்கொள்ளும் முன் மருத்துவரின் ஆலோசனையைப் பெறுவது சிறப்பு.

ஆன்மீகம்/ஜோதிடம் குறித்த தகவல்களை பெற IBC பக்தி வாட்ஸ் அப் குழுவில் இணைந்து கொள்ளுங்கள்.


+91 44 6634 5009
Direct
+91 91500 40056
WhatsApp
bakthi@ibctamil.com
Email US