பிரபல இந்திய கோவில்களில் தரப்படும் 5 வித்யாசமான பிரசாதங்கள்

By Yashini Apr 23, 2024 05:30 PM GMT
Report

சில பேர் சாமி தரிசனத்திற்க்காகவும், மன அமைதிக்காவும் கோவிலுக்கு சென்று கடவுளை வழிபடுவார்கள்.

ஆனால் சில பேர் கோவிலுக்கு பிரசாதம் சாப்பிடவே செல்வர். என்னதான் நம்ம வீட்டில் அந்த பிரசாத உணவை செய்தாலும் கோவிலில் தரும் சுவைக்கு ஈடாகாது.

அந்தவகையில், இந்திய கோவில்களில் தரப்படும் 5 வித்யாசமான பிரசாதங்கள் பற்றி பார்க்கலாம். 

1. பூரி ஜெகநாதர் கோவில்

இந்த கோவிலை அன்ன க்ஷேத்திரம் என்று சொல்வார்கள். நாட்டின் மிகப்பெரிய அன்னதான கூடம் அங்கு தான் உள்ளது. எந்நேரம் போனாலும் சாப்பாடு கிடைக்கும். இந்த கோவிலில் காஜா பிரசாதமாக வழங்கப்படுகிறது.

பிரபல இந்திய கோவில்களில் தரப்படும் 5 வித்யாசமான பிரசாதங்கள் | 5 Different Popular Prasadam Of Indian Temples

2. திருப்பதி ஏழுமலையான் கோவில்

லட்டு என்றாலே அது திருப்பதி லட்டுதான். கடலை மாவு, நெய், சர்க்கரை, உலர் திராட்சை, முந்திரி சேர்த்து செய்யப்படும் இதன் சுவை அனைவரின் நாக்கையும் அடிமையாக்கிவிடும்.

பிரபல இந்திய கோவில்களில் தரப்படும் 5 வித்யாசமான பிரசாதங்கள் | 5 Different Popular Prasadam Of Indian Temples

3. துவாரகை கோவில்

பிருந்தாவனத்தில், துவாரகையிலும் உள்ள கிருஷ்ணர் கோவில்களில் காலை பூஜையின் போது கடைந்து எடுத்த வெண்ணையை பிரசாதமாக தருவார்கள்.

பிரபல இந்திய கோவில்களில் தரப்படும் 5 வித்யாசமான பிரசாதங்கள் | 5 Different Popular Prasadam Of Indian Temples

4. வைஷ்ணவோ தேவி கோவில்

ஜம்முவில் உள்ள வைஷ்ணவோ தேவி கோவிலில் முர்முரா (சாத உருண்டை), இலைச்சிடானா அல்லது சர்க்கரை உருண்டைகள், சில உலர்ந்த பழங்கள் மற்றும் வெயிலில் உலர்த்திய ஆப்பிள்களைப் பிரசாதமாகப் பெறுவீர்கள்.

பிரபல இந்திய கோவில்களில் தரப்படும் 5 வித்யாசமான பிரசாதங்கள் | 5 Different Popular Prasadam Of Indian Temples

5. ஹனுமான் கோயில்

காசியில் உள்ள புகழ்பெற்ற ஹனுமான் கோயிலில் 2 வகையான லட்டுகள் வழங்கப்படுகிறது. ஒன்று கடலை மாவு செய்த லட்டு. மற்றொன்று பாலை சுண்ட வைத்து செய்யப்படும் லால் பேடா.   

பிரபல இந்திய கோவில்களில் தரப்படும் 5 வித்யாசமான பிரசாதங்கள் | 5 Different Popular Prasadam Of Indian Temples

ஆன்மீகம்/ஜோதிடம் குறித்த தகவல்களை பெற IBC பக்தி வாட்ஸ் அப் குழுவில் இணைந்து கொள்ளுங்கள். 

+91 44 6634 5009
Direct
+91 91500 40056
WhatsApp
bakthi@ibctamil.com
Email US