2025 ஆண்டு அதிர்ஷ்ட பண மழையில் நனைய போகும் நட்சத்திரங்கள் யார்?

By Sakthi Raj Dec 17, 2024 10:31 AM GMT
Report

2024ஆம் ஆண்டு இன்னும் 13 நாட்களில் முடிவடையுள்ளது.இந்த ஆண்டு பல ராசிகளும் நட்சத்திரங்களும் நன்மை தீமை அனுபவித்திருப்பார்கள்.அப்படியாக பலரும் 2024ஆம் ஆண்டு விட்டதை புது வருடத்தில் பிடிக்க காத்திருக்கின்றனர்.

மேலும்,மனிதன் என்னதான் யோசித்தாலும் கிரகங்களின் அருள் கட்டாயம் வேண்டும்.அந்த வகையில் வருகின்ற புத்தாண்டில் கிரகங்கள் தங்களுடைய இடத்தை மாற்றம் செய்கிறது.அதனால் சிலர் நட்சத்திரங்களுக்கு நல்ல யோகம் உண்டாகும்.

நாம் இப்பொழுது கிரகங்களின் மாறுதலால் அதிர்ஷட பண மலையில் நனையும் நட்சத்திரங்கள் யார் என்று பார்ப்போம்.

அஸ்வினி:

அஸ்வினி நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு இந்த புத்தாண்டு மன அமைதியை கொடுக்கும் ஆண்டாகும்.உங்களுடைய கடின உழைப்பு மற்றும் விடாமுயற்சியால் நீங்கள் நினைத்ததை சாதிப்பீர்கள்.எதிர்பார்த்த இடத்தில் இருந்து பண வரவுகள் கிடைக்கும்.சுக்கிரனின் ஆசீர்வாதம் இருப்பதால் அனைத்து முயற்சிகளும் வெற்றிகரமானதாக முடியும்.

ரோகிணி:

ரோகிணி நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு 2025-ம் ஆண்டு தொட்டது எல்லாம் பொன்னாகும் ஆண்டாகும்.வியாபாரம் செய்பவர்களுக்கு மிக பெரிய லாபத்தை பெற்று தரும்.இத்தனை நாள் நெருக்கடியில் இருந்த பண பிரச்சனை விரைவில் முடிவிற்கு வரும்.எதிராக்காலத்திற்கு உண்டான ஏற்பாடுகளை நிறைவாக செய்து முடிப்பீர்கள்.

பெண் குழந்தைகள் செல்ல கூடாத முருகன் கோயில் எங்கு இருக்கிறது தெரியுமா?

பெண் குழந்தைகள் செல்ல கூடாத முருகன் கோயில் எங்கு இருக்கிறது தெரியுமா?

மிருகசீரிஷம்:

மிருகசீரிஷ நட்சத்திரத்தினருக்கு வரும் ஆண்டும் மிக இறைவனின் பரிபூர்ண அருளால் வெற்றி பெரும் ஆண்டு.ஆண்டின் தொடக்கத்தில் இருந்தே மிருகசீரிஷ நட்சத்திரக்காரர்களின் வெற்றியை பார்க்க முடியும்.சுக்கிரன் மிருகசீரிஷ நட்சத்திரத்திரக்காரர்களின் அனைத்து முயற்சிகளுக்கும் ஆதரவாக இருப்பார்.

பூசம்:

பூச நட்சத்திரக்காரர்களுக்கு வாழ்க்கையில் செழிப்பும் வளர்ச்சியும் உண்டாகும்.நிதி நிலையில் எதிர்பாராத முன்னேற்றத்தை பார்க்க முடியும்.மாணவர்களுக்கு படிப்பு சம்பந்தமான விஷயங்களில் அனுகூலம் உண்டாகும்.உங்களுடைய நல்ல எண்ணங்களால் உங்களுக்கு வளர்ச்சி தடுக்க முடியாததாக இருக்கும்.பொன் பொருள் சேர்க்கை உண்டாகும்.

ஆயில்யம்:

ஆயில்ய நட்சத்திரக்காரர்களை தேடி அதிர்ஷ்ட வாய்ப்புகள் வரும்.கணவன் மனைவி இடையே ஏற்பட்ட கருத்துவேறுபாடுகள் படிப்படியாக குறையும்.மறைமுக எதிரிகள் உங்களை விட்டு விலகுவார்கள்.திருமண வரன் தேடுபவர்களுக்கு நல்ல வரன் அமையும்.கோர்ட்டில் சம்பந்தமான பிரச்சனையில் நீங்கள் எதிர்பார்த்த வெற்றி கிடைக்கும்.     

ஆன்மீகம்/ஜோதிடம் குறித்த தகவல்களை பெற IBC பக்தி வாட்ஸ் அப் குழுவில் இணைந்து கொள்ளுங்கள்.


+91 44 6634 5009
Direct
+91 91500 40056
WhatsApp
bakthi@ibctamil.com
Email US