காசியில் இந்த 5 பேர் உடல்களை எரிக்க அனுமதி இல்லையாம்
இந்துக்கள் புனித தலங்களில் முதன்மையாக கருதப்படும் முக்கிய தலம் காசி ஆகும். காசி சென்றால் நம் வாழ்நாளில் தெரிந்தும் தெரியாமலும் செய்த பாவங்கள் எல்லாம் விலகி விடும் என்பது தவிர்க்க முடியாத நம்பிக்கை. அதோடு, இறந்தவர்களை அங்கே எரிப்பதன் மூலம் அவர்கள் நேராக சொர்க்கத்திற்கு செல்வதாகவும் கூறப்படுகிறது.
இதனால், பலரும் தங்களின் கடைசி காலத்தை காசியில் கழிக்க வேண்டும் என்று விரும்புவார்கள். அப்படியாக, காசியில் யார் உடலை வேண்டுமானலும் எரிக்க அனுமதி இருந்தாலும், குறிப்பிட்ட ஒரு 5 பேரின் உடலை மட்டும் எரிக்க அனுமதி இல்லை என்கிறார்கள். அதை பற்றி பார்ப்போம்.
1. காசியில் ஒரு பொழுதும் சாதுக்களின் உடல்களை எரிக்க அனுமதிக்கமாட்டார்கள். காரணம், சாதுக்களின் உடல்கள் எப்பொழுதும் தண்ணீரில் விட படுகின்றன அல்லது தரையில் புதைக்க படுகிறார்கள்.
2. மேலும், பன்னிரண்டு வயதிற்குள் இறந்த குழந்தைகளின் உடலை எரிக்க அனுமதிப்பதில்லை. அவர்கள் தெய்வங்களின் அம்சமாக கருதப்படுகிறார்கள்.
3. கர்ப்பிணி பெண்கள் ஒரு பொழுதும் காசியில் எரிக்க அனுமதிப்பதில்லை. அவர்கள் உடல் எரிக்கும் பொழுது வயிறு வெடிக்கக்கூடும். இதனால் அவர்களின் உடல்கள் எரிக்கப்படுவதில்லை.
4. அதே போல் பாம்பு கடித்து இறந்தவர்களின் உடலை காசியில் எரிக்க அனுமதி இல்லை. பாம்பு கடித்த உடல்களில் மூளை 21 நாட்கள் உயிருடன் இருக்கும் என்பதால், அவற்றை தண்ணீரில் மிதக்க விட்டால் அவர்கள் மீண்டும் உயிர்ப்பிக்க முடியும் என நம்பப்படுகிறது.
5. தொழு நோயால் பாதிக்க பட்டவர்களின் உடலையும் காசியில் எரிக்க அனுமதிப்பதில்லை என்கிறார்கள். அவர்களை எரிக்கும் பொழுது அவர்களின் கிருமிகள் காற்றில் பரவ கூடும் என்பதால், அவர்கள் உடலை எரிக்க அனுமதிப்பதில்லை என்கிறார்கள்.
ஆன்மீகம்/ஜோதிடம் குறித்த தகவல்களை பெற IBC பக்தி வாட்ஸ் அப் குழுவில் இணைந்து கொள்ளுங்கள். |