சிவபெருமான் எப்பொழுதும் உங்களை காப்பாற்றுகிறார் என்பதை உணர்த்தும் 5 அறிகுறிகள்

By Sakthi Raj Jun 30, 2026 06:09 AM GMT
Report

கர்ம வினைகளே அடியோடு அழிக்க கூடியவர் சிவபெருமான். அப்படியாக சிவபெருமானுடைய அருளைப் பெறுவது என்பது அவ்வளவு எளிதல்ல. காரணம் நீங்கள் எவ்வளவு மண்டியிட்டு சிவபெருமானை வேண்டினாலும் அவரின் அருட்பார்வை இல்லை என்றால் நீங்கள் அவரை நெருங்கவே முடியாது.

அதனால் தான் சிவபெருமான் ஒரு பக்தரை ஆட்கொண்டு விட்டால் அந்த பக்தன் உயர்ந்து நிலைக்கு சென்று விடுவார் என்று சொல்கிறார்கள். அந்த வகையில், சிவபெருமான் உங்களுடன் எப்பொழுதும் இருக்கிறார் என்பதை உணர்த்தக்கூடிய ஐந்து அறிகுறிகள் இருக்கிறது, அதை பற்றி பார்ப்போம்.

சிவபெருமான் எப்பொழுதும் உங்களை காப்பாற்றுகிறார் என்பதை உணர்த்தும் 5 அறிகுறிகள் | 5 Sign That Lord Shiva Blessing Is Always With You

தயவு செய்து இந்த பொருட்களை யாருக்கும் கொடுக்காதீர்கள்.. யாரிடமும் வாங்காதீர்கள்

தயவு செய்து இந்த பொருட்களை யாருக்கும் கொடுக்காதீர்கள்.. யாரிடமும் வாங்காதீர்கள்

1. உங்களுக்கு எவ்வளவு பெரிய பிரச்சனைகள் வந்தாலும் நீங்கள் மன தைரியத்தை இழக்க மாட்டீர்கள். எல்லாம் சிவனின் செயல், சிவன் நடத்துகின்ற நாடகம் என்னை கட்டாயமாக கைவிடமாட்டார் என்கின்ற தீர்க்க நம்பிக்கை இருக்கும்.

2.எவ்வளவு பெரிய தடைகள் இருந்தாலும் மனம் உடைந்து போனாலும் சரியான நேரத்தில் உங்களை தூக்கி விடுவதற்கு சரியான நபர்கள் வந்து விடுவார்கள்.

3.உங்களை அறியாமல் அடிக்கடி "ஓம் நமசிவாய" என்ற மந்திரத்தை எப்பொழுதும் நீங்கள் ஜெபித்துக் கொண்டே இருப்பீர்கள்.

எந்த திதியில் என்ன செய்யலாம்? என்ன செய்யக்கூடாது? முழுமையான விவரங்கள் இதோ

எந்த திதியில் என்ன செய்யலாம்? என்ன செய்யக்கூடாது? முழுமையான விவரங்கள் இதோ

4.நீங்கள் ஏதேனும் தவறான முடிவுகள் எடுக்கிறீர்கள் என்றால் அந்த இடத்தில் உங்களுக்கு சிவபெருமான் ஏதேனும் ஒரு ரூபத்தில் வந்து காப்பாற்றி விடுவார்.

5.உங்களை சுற்றி எவ்வளவு பெரிய கடினமான காலங்கள் இருந்தாலும் உங்களுடைய மனம் அமைதி நிலையோடு நிச்சயம் இறுதி முடிவானது நல்லதாக இருக்கும் என்று தீர்க்கமான நம்பிக்கை கொண்டிருக்கும். சிவபெருமான் எந்த இடத்திலும் நம்மை கைவிட மாட்டார் என்று நீங்கள் முழுமையாக நம்புவீர்கள்.

ஆன்மீகம்/ஜோதிடம் குறித்த தகவல்களை பெற IBC பக்தி வாட்ஸ் அப் குழுவில் இணைந்து கொள்ளுங்கள்.


+91 44 6634 5009
Direct
+91 91500 40056
WhatsApp
bakthi@ibctamil.com
Email US