தற்பொழுது கோடை காலம் முடிந்து மழை காலம் தொடங்கி இருக்கிறது. இந்த காலகட்டங்களில் பாம்புகள் தங்களுக்கு வெப்பமான இடங்களை தேடி வீடுகளுக்கு அருகே வரக்கூடும். அதனால் நம்முடைய வீடுகளை இந்த மழை காலங்களில் சுத்தமாக பராமரிப்பது அவசியமாகும். அதேபோல் நம் வீட்டை சுற்றி பாம்பு இருக்கிறது என்பதை உணர்த்தும் சில அறிகுறிகளை தெரிந்து கொண்டால் நாம் கவனமாக இருக்கலாம். அதைப் பற்றி பார்ப்போம்.
நம்முடைய வீடுகளில் திடீரென்று பறவைகள், அணின் சத்தம் எழுப்புதல் மற்றும் நீலப் பறவைகள் அல்லது அணில்கள் கூட்டமாக இருந்து ஒளி எழுப்புதல் குறிப்பிட்ட ஒரு இடத்தை பார்த்துக்கொண்டு சத்தமிட்டு கொண்டிருந்தால் அங்கு பாம்புகள் அதிகம் இருப்பதற்கு வாய்ப்புகள் உள்ளது. பறவைகள் பாம்பை பார்த்தவுடன் அதை விரட்டுவதற்கு முயற்சி செய்கின்றன என்பது குறிப்பிடத்தக்கது.

திடீர் என்று தெரு நாய்கள் அல்லது பூனைகள் விசித்திரமாக நடந்து கொள்ளும். நம்முடைய பகுதிகளை சுற்றி நாய் அல்லது பூனை காரணம் இல்லாமல் ஒரு மூலயை பார்த்து குறைத்தாலும் அல்லது மோப்பம் பிடித்துக் கொண்டு இருந்தாலும் அதை நாம் சாதாரணமாக எடுத்துக் கொள்ளக் கூடாது.
இந்த பிராணிகளுக்கு பாம்பின் வாசனையை அறிந்து அதன் இருப்பிடத்தை தெரிந்து கொள்ள முடியும். அதேபோல், வீடுகளை சுற்றி பாம்பின் தோல்களை பார்த்தால் உடனடியாக அதை அலட்சியம் செய்யக்கூடாது. தோல் கிடைக்கின்ற இடத்திற்கு அருகில் தான் பாம்பு ஒளிந்திருக்கும். மண் அல்லது தூசியில் 'S' என்ற வடிவங்கள் இருந்தாலும் நாம் அந்த இடத்தை அலட்சியம் செய்யக்கூடாது.

அங்கு பாம்பு நடமாட்டம் இருப்பதை நமக்கு உணர்த்துகிறது. அதேபோல், நம்முடைய வீடுகளில் விசித்திரமான ஈரமான வாசனை வர துவங்கும், அதாவது வீட்டில் சேமிப்பு அறை, பழைய பொருட்கள் வைத்திருக்கும் இடம், தண்ணீர் தொட்டி போன்ற இடங்களில் ஈரமான வெள்ளரிக்காயிலிருந்து வருகின்ற வாசனைப் போல் வரும். அவ்வாறு வாசனை வருகின்ற நேரத்தில் நாம் கவனமாக இருக்க வேண்டும்.
மேலும், இந்த உலகத்தில் பிறந்த எல்லா ஜீவன்களும் வாழ்வதற்காகவே பிறந்தவை. அவை எப்பொழுதும் நம்மை தாக்க வேண்டும் என்று நினைப்பதல்ல. ஆனால் தங்களை காத்துக் கொள்வதற்கு சில நேரங்களில் அவர்கள் கோபமாக நடந்து கொள்வதால் அதன் தாக்கம் நமக்கு பெரிய விளைவுகளை கொடுத்து விடுகிறது.
மழைக்காலங்களில் அவர்களுக்கு இருப்பிடம் இல்லாமல் அதற்குரிய இடத்தை தேடி வருவது இயல்பு என்றாலும் நாம் நம்முடைய குழந்தைகளும் வீட்டில் உள்ளவர்களின் நலனிலும் பாதுகாப்பு கருதி அவர்களுக்கு எந்தத் தீங்கு ஏற்படாதவாறும் நமக்கும் அதனால் எந்த தீங்கு ஏற்படாதவாறும் அதனை பாதுகாத்து வன விலங்கு அலுவலர்களிடம் ஒப்படைப்பது அவசியமாகும்.
| ஆன்மீகம்/ஜோதிடம் குறித்த தகவல்களை பெற IBC பக்தி வாட்ஸ் அப் குழுவில் இணைந்து கொள்ளுங்கள். |