சனியின் ஆட்டம் ஆரம்பம்.. பணம் மற்றும் வேலையில் கவனமாக இருக்க வேண்டிய ராசிகள்

By Sakthi Raj Jun 10, 2026 07:17 AM GMT
Report

ஜோதிடத்தில் சனிபகவான் மிகவும் முக்கியமான கிரகமாக இருக்கிறார். அதுமட்டுமல்லாமல் மெதுவாக நகரக்கூடிய கிரகமாகவும் சனி பகவான் இருக்கிறார். இவர் ஒரு ராசியிலிருந்து மற்றொரு ராசிக்கு நகர்வதற்கு சுமார் இரண்டரை ஆண்டுகள் எடுத்துக் கொள்கிறார்.

மேலும், சனியின் நகர்வுகள் ஒவ்வொரு தனிநபர் வாழ்க்கையிலும் அதனுடைய பிரதிபலப்பை கொடுக்கும். இந்த வகைகள் ஜூன் ஒன்பதாம் தேதி சனி சந்திரன் சேர்க்கை உருவாகியுள்ளது. அதாவது மீன ராசியில் சந்திரன் பெயர்ச்சி அடைந்துள்ளார். இதனால் விஷயோகம் உருவாகியுள்ளது.

இந்த யோகம் அசுப யோகம் ஆகும். இதை யோகத்தின் தாக்கம் 12 ராசிகளுக்கும் இருக்கும் அதில் மூன்று ராசிகள் மிகவும் கவனமாக இருக்க வேண்டும் என்று சொல்லப்படுகிறது. அவர்கள் எந்த ராசியில் என்று பார்ப்போம்.

சனியின் ஆட்டம் ஆரம்பம்.. பணம் மற்றும் வேலையில் கவனமாக இருக்க வேண்டிய ராசிகள் | Sani Chandran Conjunction Bring Vish Yog 3 Zodiac

நீங்கள் துலாம் ராசியில் பிறந்தவர்களா? உங்கள் வாழ்க்கையின் கர்ம பலன் இதுதான்?

நீங்கள் துலாம் ராசியில் பிறந்தவர்களா? உங்கள் வாழ்க்கையின் கர்ம பலன் இதுதான்?

மகரம்:

மகர ராசிக்காரர்களுக்கு சனி சந்திரன் சேர்க்கையானது மிகவும் கவனமாக இருக்க வேண்டிய கட்டாயத்தை கொடுக்கிறது. இந்த காலகட்டங்களில் இவர்களுக்கு எதிர்மறையான எண்ணங்கள் உருவாகக்கூடும்.

நினைத்த காரியங்களிலும் வேலையிலும் இறங்குவதற்கு சில கால தாமதங்களை சந்திப்பீர்கள். மன அழுத்தம் பிரச்சனைகள் உருவாகலாம். குடும்பத்தில் சிறு சிறு சண்டைகள் ஏற்படக்கூடும். பணியிடங்களில் தேவையில்லாத வாக்குவாதங்களை தவிர்த்து விடுங்கள். நட்புகளிடம் பழகும் பொழுது மிகவும் கவனமாக இருக்க வேண்டும்.

சிம்மம்:

சந்திரன் சனி சந்திரன் சேர்க்கை சிம்ம ராசிக்காரர்களுக்கு மிகுந்த கவனமாக செயல்பட வேண்டிய நிலையை குறிக்கிறது. இவர்களுக்கு தேவையில்லாத மன அழுத்தம் உருவாகும். பொருளாதார இழப்புகள் மற்றும் நெருக்கடிகளை சந்திப்பார்கள்.

தேவை இல்லாத சங்கடங்களை சந்திக்கக் கூடிய நிலை இருப்பதால் எல்லா விஷயங்களிலும் நிதானத்தை கடைபிடிக்க வேண்டியது அவசியம். உடல் ஆரோக்கியத்தில் மிகுந்த கவனம் செலுத்த வேண்டும் எந்த விஷயத்தையும் தைரியமாக எதிர்கொள்வது அவசியம்.

யார் இந்த முப்பத்து முக்கோடி தேவர்கள் ? எங்கே இருக்கிறார்கள்?

யார் இந்த முப்பத்து முக்கோடி தேவர்கள் ? எங்கே இருக்கிறார்கள்?

 

 துலாம்:

துலாம் ராசிக்காரர்களுக்கு திடீர் என்று சில சிக்கல்கள் வர வாய்ப்புகள் உள்ளது. வேலை செய்யும் இடங்களில் தேவையில்லாத வாக்குவாதங்களை தவிர்க்க வேண்டும். உங்கள் வேலையை முழுமையாக செய்வது அவசியமாகும்.

இந்த காலகட்டங்களில் பணி மாறுதலுக்காக எந்த முயற்சிகளையும் செய்ய வேண்டாம். உடல் பிரச்சினைகளை சந்திக்க கூடும். பயணம் செல்லும் பொழுது மிகுந்த பாதுகாப்பாக இருக்க வேண்டும். பொருளாதார ரீதியாக எல்லா விஷயங்களையும் கவனமாக கையாள்வது அவசியமாக உள்ளது.   

ஆன்மீகம்/ஜோதிடம் குறித்த தகவல்களை பெற IBC பக்தி வாட்ஸ் அப் குழுவில் இணைந்து கொள்ளுங்கள்.


+91 44 6634 5009
Direct
+91 91500 40056
WhatsApp
bakthi@ibctamil.com
Email US