யார் இந்த முப்பத்து முக்கோடி தேவர்கள் ? எங்கே இருக்கிறார்கள்?

By Sakthi Raj Jun 10, 2026 04:46 AM GMT
Report

பொதுவாக, நம்முடைய இந்து மத வழிபாடுகளில் இறைவனின் நாமத்தை சொல்லி அவர்களின் ஆசீர்வாதமும் 33 கோடி தேவர்களின் அருளும் நமக்கு கிடைக்க வேண்டும் என்று ஆசீர்வாதம் செய்வது உண்டு.

அதாவது கோவிலில் பசுமாட்டிற்கு கோ பூஜை செய்கின்ற பொழுது அர்ச்சகர் தீபாரதனை காட்டி பசுவை வேண்டிக் கொள்ளுங்கள், பசுவை சேவித்தால் பிரம்மா, விஷ்ணு, சிவன், அஷ்டலட்சுமி மற்றும் முப்பத்து முக்கோடி தேவர்களையும் வணங்கிய பலன் கிடைக்கும் என்பார். அப்படி என்றால் நம்முடைய இந்து மதத்தில் முப்பத்து முக்கோடி தெய்வங்கள் என்றால் யார்? அவர்கள் பற்றி தெரிந்து கொள்வோம்.

முப்பத்து முக்கோடி என்பது 33 கோடியா? அப்படியானால் நம்முடைய இந்து மத தர்மத்தில் 33 கோடி தெய்வங்கள் உள்ளனரா? இங்கே நாம் கோடி என்பது எண்ணிக்கையை குறிக்கக்கூடிய சொல் என்று நினைக்கின்றோம். ஆனால், கோடி என்ற சொல்லுக்கு சமஸ்கிருதத்தில் பிரிவு அல்லது வகை என்பதை குறிக்கிறது.

யார் இந்த முப்பத்து முக்கோடி தேவர்கள் ? எங்கே இருக்கிறார்கள்? | Who Are The 33 Crore Hindu Gods Where Do They Live

ஆக, மொத்தம் 33 வகையான தெய்வங்கள் இந்து சனாதன தர்மத்தில் இருக்கின்றன. பொதுவாக, கிராமங்களில் இந்த வார்த்தை பயன்படுத்துவதை கேள்விப்பட்டிருப்போம். அதாவது தெருக்கோடியில் இருந்து வருகிறேன் என்பார்கள். அப்படி என்றால் கோடி தெரு என்பதல்ல அது தெருவின் பிரிவிலிருந்து வருகிறேன் என்பதை குறிக்கிறது.

அதைப்போல், கோடி வேஷ்டி என்றால் ஒரு கோடி வேஷ்டி எண் என்பது அல்ல. ( வெள்ளாவியில் வண்ணார் வைத்தால் வெள்ளையாகி விடும் எனவே அதை கோடி வெளுப்பாக கொடு என்பர் ஊர்களில்). ஆகக் கோடி என்பது எண்ணிக்கை அல்ல அதன் உண்மையான அர்த்தம் பிரிவு என்பதே ஆகும். இதனை "வசு ருத்ர ஆதித்ய ரூபம்" என்று மூன்றாக பிரிப்பார்கள்.

பொதுவாக, அமாவாசை தர்பணத்தில் பித்ரு வசு ரூபமாகவும் பிதாமஹர் ருத்ர ரூபமாகவும் பிதுர்பிதாமஹர் ஆதிதய ரூபமாகவும் உள்ளதாக கூறி தர்பணம் செய்வோம். அதில், வசு கீழ் நிலை ருத்ரர் இரண்டாம் நிலை ஆதித்யர் மூன்றாம் நிலை இந்த மூன்று நிலையில் 31பிரிவுகள் அடங்கும். அந்த 31 பிரிவுகள் எவை என்று தெரிந்து கொள்வோம்.

யார் இந்த முப்பத்து முக்கோடி தேவர்கள் ? எங்கே இருக்கிறார்கள்? | Who Are The 33 Crore Hindu Gods Where Do They Live

2026: கடகத்தில் குருவுடன் இணையும் சுக்கிரன்.. எச்சரிக்கையாக இருக்க வேண்டிய ராசிகள்

2026: கடகத்தில் குருவுடன் இணையும் சுக்கிரன்.. எச்சரிக்கையாக இருக்க வேண்டிய ராசிகள்

அதில் ஆதித்ய நிலையில் 12 பிரிவுகள்

1) விஷ்ணு

2)தாதா

3) மித

4) ஆர்யமா

5) ஷக்ரா

6) வருண

7) அம்ஷ

8) பாக

9) விவாஸ்வான்

10) பூஷ

11) ஸவிதா

12) தவாஸ்தா வசு நிலையில்

8 வகையாவன:

13. தர

14. த்ருவ

15. சோம

17. அனில

18. அனல

19. ப்ரத்யுஷ

20. ப்ரபாஷ ருத்ரன் நிலையில்

எந்த ராசிக்காரர்கள் எத்தனை முக ருத்ராட்சம் அணிய வேண்டும் ? முழு விவரங்கள் இதோ

எந்த ராசிக்காரர்கள் எத்தனை முக ருத்ராட்சம் அணிய வேண்டும் ? முழு விவரங்கள் இதோ

11 பிரிவுகள்

21. ஹர

22. பஹூரூப

23. த்ரயம்பக

24. அபராஜிதா

25. ப்ருஷாகாபி

26. ஷம்பூ

27. கபார்தி

28. ரேவாத்

29. ம்ருகவ்யாத

30. ஷர்வா

31.கபாலி மற்றும் 2 பிரிவு அஷ்வினி குமாரர்கள்.

  ஆக மொத்தம் = 33 வகையான (பிரிவுகளான) தெய்வங்கள் ஆக, நாம் 39 கோடி என்று சொல்லக்கூடிய தெய்வங்கள் இவர்கள்தான்.

 ஆன்மீகம்/ஜோதிடம் குறித்த தகவல்களை பெற IBC பக்தி வாட்ஸ் அப் குழுவில் இணைந்து கொள்ளுங்கள்.


+91 44 6634 5009
Direct
+91 91500 40056
WhatsApp
bakthi@ibctamil.com
Email US