இந்த 5 அறிகுறிகள் இருந்தால் பிரபஞ்சம் உங்களை வழி நடத்திக் கொண்டிருக்கிறதாம்
இந்த பூமியில் பிறந்த ஒவ்வொரு மனிதர்களும் இந்த பிரபஞ்சத்திற்கு முக்கியமானவர்கள். ஒவ்வொரு உயிரினமும் இந்த பிரபஞ்சத்தினுடைய குழந்தைகள் ஆவார்கள். அந்த வகையில், நம்முடைய வாழ்க்கையில் எதிர்காலத்தில் நடக்கக்கூடிய சில விஷயங்களை முன்னதாகவே சில அறிகுறிகள் வைத்து நாம் தெரிந்து கொள்ள முடியும்.
அதாவது, நாம் மிகவும் மன அழுத்தத்தில் இருக்கும் காலத்தில் ஏதேனும் எதிர்பாராத வழியில் இருந்து நமக்கு ஒரு ஆறுதல் கிடைப்பதையும் நாம் பார்க்கலாம். இதற்கெல்லாம் காரணம் இந்த பிரபஞ்சம் நம்மை எப்பொழுதும் கண்காணித்துக் கொண்டிருப்பதின் அடையாளமாகும்.
அதாவது இந்த பிரபஞ்சம் நம்மை தொடர்ந்து கொண்டு இருக்கிறது, நம்மை எப்பொழுதும் பாதுகாத்துக் கொண்டிருக்கிறது நம்முடன் ஏதேனும் ஒரு வகையில் உரையாடிக் கொண்டு இருக்கிறது என்பதை நாம் ஒரு சில விஷயங்களை வைத்து தெரிந்து கொள்ளலாம். அதைப் பற்றி பார்ப்போம்.

1. ஜோதிடத்தில் ஏஞ்சல் எண்கள் என்று குறிப்பிட்ட சில எண்கள் இருக்கிறது. அதாவது தொடர்ந்து ஒருவருக்கு 11.11, 22.2, 5.55 இவ்வாறு எண்கள் தெரிகிறது என்றால் அவர்கள் மீது இந்த பிரபஞ்சம் எப்பொழுதும் ஒரு பார்வை வைத்துக் கொண்டு இருப்பதின் அர்த்தமாகும். ஆதலால் இவ்வாறான எண்கள் அவர்கள் பார்க்கும் பொழுது அவர்கள் மனதில் அந்த நேரங்களில் நேர்மறையான ஒரு சிந்தனை கொண்டு ஒரு நல்லதை நினைத்தால் நிச்சயமாக அதற்கான விடை வெகு விரைவில் கிடைக்கும்.
2. அதேப்போல் ஒருவருக்கு உள்ளுணர்வானது மிகவும் சக்தி வாய்ந்ததாக வேலை செய்யும். அதாவது அவர்கள் ஏதேனும் ஒரு முக்கிய முடிவுகள் எடுக்கப் போகிறார்கள் என்றால் அவர்களை மீறி ஒரு உள் உணர்வு அவர்களை வழிநடத்துவதை நாம் பார்க்க முடியும்.
அவ்வாறாக அந்த முழு உணர்வையும் மீறி அவர்கள் ஒரு விஷயம் செய்யும் பொழுது அது நிச்சயம் அவர்களுக்கு ஒரு எதிர்வினையை தான் கொடுக்கிறது. ஆக உள்ளுணர்வு உங்களுக்கு ஒரு விஷயத்தை சொல்லும் பொழுது அதை முழுமையாக கவனித்து செயல்முறைக்கு கொண்டு வரும் பொழுது நல்ல மாற்றம் உண்டாகும்.
3. அதைப்போல் ஒரு சிலருக்கு ஏதேனும் ஒரு கஷ்ட காலம் வருகிறது என்றால் அந்த கஷ்ட காலங்களில் இருந்து முன்னதாகவே நாம் நம்மை தெளிவுபடுத்திக் கொள்வதற்கு அந்த விஷயம் தொடர்பாகவே நிறைய அறிகுறிகள் அல்லது அது தொடர்பான நிறைய செய்திகளை நாம் கண்களில் பார்க்க முடியும்.

ஆக அதை நாம் தவற விட்டு ஏதேனும் ஒரு சிக்கலில் மாட்டிக் கொண்டிருக்கும் நேரத்தில் நாம் சற்று அமர்ந்த யோசித்துப் பார்த்தால் இந்த விஷயம் நடக்க இருப்பதற்கு அறிகுறியாக நாம் நிறைய விஷயங்களை முன்னதாகவே கடந்து வந்திருப்போம்.
அதை நாம் வெறுமனே கடந்து வந்திருப்பதால் மட்டுமே நாம் இன்று ஒரு கஷ்டத்தில் இருக்க நேரலாம். ஆக நம்மை சுற்றி நடப்பதில் எப்பவும் நாம் ஒரு விழிப்புணர்வு வைத்து இருக்கும் பொழுது இந்த பிரபஞ்சம் நம்மிடம் பேசக்கூடிய ஒரு செய்தியை நாம் அறிந்து கொண்டு அதற்கு தகுந்தார் போல் செயல்பட முடியும்.
4. ஒரு சிலருக்கு கனவு என்பது தொடர்ச்சியாக ஒரே மாதிரியாக வந்து கொண்டிருக்கும். அந்த கனவில் அவர்களுக்கு ஏதோ ஒரு விஷயத்தை தெரிவிப்பதற்க்கான அறிகுறியாகவே இருக்கிறது. ஆக, சில நேரங்களில் பிரபஞ்சம் நம்மிடம் பேச இயலாத நேரங்களில் கனவுகள் வழியாக நமக்கு நம்முடைய மனதின் தேடலுக்கான விடைகளை கொடுத்து செல்வதையும் நம் காணலாம்.
5. அதைப்போல் நம்முடைய மனதை மிக ஆழமாக கவனித்துக் கொண்டிருக்கிறது என்பதின் முக்கிய அறிகுறி நாம் ஒரு விஷயம் நினைக்க அது வெகு விரைவில் நடந்து விடக் கூடியதாக இருக்கும. அதாவது நீண்ட நாட்களாக ஒரு மனிதரை சந்திக்க வேண்டும் என்று நினைத்திருக்கிறீர்கள், ஆனால் அந்த நபர் உங்களுடன் தொடர்பு இல்லாத நேரத்தில் திடீரென்று அந்த நபராகவே உங்களிடம் வந்து பேசுவார்கள்.
ஆக இந்த அறிகுறிகள் எல்லாம் பிரபஞ்சம் உங்களை எப்பொழுதும் கவனித்துக் கொண்டிருக்கிறது உங்களுடன் உரையாடிக் கொண்டிருக்கிறது என்பது ஒரு முக்கிய அறிகுறியாகும். அதனால், இவ்வாறான அறிகுறிகளை நீங்கள் உங்கள் வாழ்க்கையில் பார்க்கிறீர்கள் என்றால் உங்களை நீங்கள் பரிசீலனை செய்து கொள்ள வேண்டிய நிலையில் இருக்கிறீர்கள்.
அதாவது உங்களுடைய எண்ணத்தை நீங்கள் மாற்றி அமைத்துக் கொள்ள வேண்டும். அதாவது நீங்கள் நினைப்பதை இந்த பிரபஞ்சம் உங்களுக்கு உடனடியாக கொடுக்கக்கூடிய நிலையில் இருக்கின்ற நேரத்தில் அந்த எண்ணமானது நீங்கள் சரியானதாக வைக்கும் பொழுது உங்கள் வாழ்க்கை சிறப்பாக அமையும்.
அதை எதிர்மறையாக நீங்கள் நினைத்துக் கொண்டு இருந்தால் அதையும் இந்த பிரபஞ்சம் கொடுத்து விடும். ஆதலால் நம்முடைய எண்ணங்கள் சரியாக இருப்பது அவசியம். அதில் மிக முக்கியமாக எனக்கு ஒரு விஷயம் வேண்டும் என்று நினைப்பதை காட்டிலும் இது நடந்தால் நன்றாக இருக்கும் என்று எண்ணினாலே இந்த பிரபஞ்சம் உங்களுக்கு அதை கையில் கொடுத்துவிடும்.
| ஆன்மீகம்/ஜோதிடம் குறித்த தகவல்களை பெற IBC பக்தி வாட்ஸ் அப் குழுவில் இணைந்து கொள்ளுங்கள். |