வாஸ்து: இந்த 5 செடிகள் உங்கள் வீடுகளில் இருந்தால் உடனே அகற்றி விடுங்கள்
நம் அனைவரது வீடுகளிலும் நமக்கு பிடித்த செடிகளும் மரங்களும் வளர்த்து வருவது வழக்கமான ஒன்று தான். மேலும், நாம் வளர்க்கும் செடிகளும் மரங்களும் வீட்டின் அழகை மேம்படுத்துவதோடு, வாஸ்து ரீதியாக நம்மை பல எதிர்மறை ஆற்றல்களில் இருந்து பாதுகாத்து வருகிறது.
அப்படியாக, பலரும் அவர்களின் மனதிற்கு பிடித்த மரங்களும் செடிகளும் வீடுகளில் வளர்த்து வந்தாலும், சில மரங்கள் செடிகள் வீடுகளில் வளர்க்கக்கூடாது என்று வாஸ்து சாஸ்திரத்தில் சொல்லப்பட்டு இருக்கிறது.
அதாவது, சில மரங்கள் வீடுகளில் எதிர்மறை சக்திகளை அதிகரித்து பொருளாதார கஷ்டத்தை கொடுத்து விடுமாம். அப்படியாக, நம் வீடுகளில் வாஸ்து ரீதியாக எந்த மரங்களை வளர்க்கக்கூடாது என்று பார்ப்போம்.
1. நம் வீடுகளில் எப்பொழுதும் ஒரு செடியை மரத்தை வாடும் அளவிற்கு விடக்கூடாது. எப்பொழுதும் அதை சரியான முறையில் பராமரித்து செழிப்பாக வைத்திருக்க வேண்டும். வீடுகளில் செடிகள் வாடினால் அவை நம் குடும்பத்தை பாதிக்கக்கூடும்.
மேலும், சில கால சூழ்நிலையால் செடிகளை பராமரிக்க முடியாமல் போனால், அவற்றை மீண்டும் வளரச்செய்ய முயற்சிக்க வேண்டும், அல்லது உடனே அந்த செடிகளை அகற்றி விடுவது நல்லது. காய்ந்த செடிகளும், பராமரிக்க படாத மரங்களும் நம் வீட்டை சுற்றி இருக்கும் பொழுது அவை நம் குடும்பத்தை பாதிப்படைய செய்கிறது. அதனால் தோல்விகள், நிம்மதியின்மை வீடுகளில் உருவாகிறது.
2. சில வீடுகளில் அழகிற்காக பிளாஸ்டிக் மரங்கள் மற்றும் செயற்கை செடிகளை வைத்திருப்பார்கள். அவ்வாறு வைத்திருக்கும் பொழுது அவை நாம் தூசிகள் படியாதவாறு பார்த்துக் கொள்ள வேண்டும். அல்லது முடிந்த வரை அவ்வாறான செயற்கை செடிகள் வீடுகளில் இல்லாமல் இருப்பது நல்லது. காரணம், இந்த செடிகள் ஒரு பொழுதும் உண்மையான செடிகளில் இருக்கும் ஆற்றலை நமக்கு தருவது இல்லை.
3. அதேப்போல் வீடுகளில் ஒரு பொழுதும் பால் வடியும் செடிகளை வளர்க்கக்கூடாது. இந்த செடிகளை வீடுகளில் வளர்க்கும் பொழுது நம் வீட்டில் பொருளாதாரத்தில் நிலையற்ற தன்மை, அதோடு கவலைகளும் கஷ்டங்களும் சூழ்ந்து விடுவதாக நம்பப்படுகிறது. பெரும்பாலான கலாச்சாரங்களில் இந்த பால் வடியும் மரங்களை துரதிர்ஷ்டமாகவே பார்க்கிறார்கள்.
4. மேலும், கொடி வகை தாவரங்கள் வீடுகளில் வளர்க்கும் பொழுது நாம் மிகவும் கவனமாக இருக்க வேண்டும். காரணம், அவை நம் வீட்டில் சுவர்களில் படரும் பொழுது அந்த கொடிகளால் சுவர்கள் பாதிக்க படலாம் என்பதோடு, அதனால் தேவை இல்லாத பூச்சிகள் நம் வீட்டிற்குள் வர தொடங்கும்.
அவை நம் வீடுகளில் தேவை இல்லாத எதிர்மறை ஆற்றலை உருவாக்க கூடும். அவ்வாறு கொடி வகை தாவரங்கள் வளர்க்க விருப்பினால் அதற்கான சரியான ஏற்பாடுகளோடு செய்வது நன்மை அளிக்கும்.
5. சிலர் வீடுகளில் தாமரை மற்றும் தண்ணீரில் வளரும் செடிகளை வைத்திருப்பார்கள். அவை பார்ப்பதற்கு மிக அழகாய் இருந்தாலும், வீட்டிற்கு அதிர்ஷ்டத்தை கொண்டு வந்தாலும், தண்ணீர் செடிகளை வீடுகளில் வளர்க்கும் பொழுது அதை எப்பொழுதும் பராமரித்து கொண்டு இருப்பது அவசியம். எப்பொழுதும் அந்த தண்ணீர் சுத்தமாக இருக்க வேண்டும். இல்லையென்றால் அவை நம் வீட்டில் மந்த நிலையை உருவாக்கும்.
ஆன்மீகம்/ஜோதிடம் குறித்த தகவல்களை பெற IBC பக்தி வாட்ஸ் அப் குழுவில் இணைந்து கொள்ளுங்கள். |







