2026ல் இந்த 5 ராசிக்காரங்களுக்கு பெரும் ஆபத்து - மருத்துவ செலவு உண்டாகும்
2026-ல் நடக்க இருக்கும் பல கிரகங்களின் பெயர்ச்சியால் சில ராசிக்காரர்களுக்கு நேர்மறை பலன்களும், சில ராசிக்காரர்களுக்கு எதிர்மறை பலன்களும் கிடைக்க உள்ளது. அதன்படி உடல் நலனில் அதிக கவனத்துடன் இருக்க வேண்டிய ராசிகள் குறித்து பார்ப்போம்.

மேஷம்
அதிகப்படியான வேலைப்பளு காரணமாக உடல் சோர்வு மற்றும் மன அழுத்தம் ஏற்படலாம். கண் தொடர்பான கோளாறுகள், ரத்த அழுத்தம் சார்ந்த பிரச்சனைகள், தலைவலி தொடர்பான பிரச்சனைகள் எழுவதற்கு வாய்ப்பு உள்ளது.
சிம்மம்
இதயம் தொடர்பான பிரச்சனைகள், எலும்பு தொடர்பான உபாதைகள் இருப்பவர்கள், முதுகு வலி ஆகியவற்றை அலட்சியமாக விடுதல் கூடாது. ஆரம்பத்திலேயே மருத்துவரை அணுகுவது நல்லது.
கன்னி
தூக்கமின்மை, தேவையற்ற மருத்துவச் செலவுகள் ஏற்படலாம். வயிறு, கல்லீரல் மற்றும் எலும்பு தொடர்பான பிரச்சனைகள் ஏற்பட வாய்ப்பு உள்ளது. மனதில் எழும் வீண் கவலைகள் மன அமைதியை குலைக்கும்.
தனுசு
செரிமான மண்டலம் மற்றும் வயிறு தொடர்பான உபாதைகள் ஏற்படலாம். வெளியூர் பயணங்களின் போது உணவு கட்டுப்பாட்டுடன் இருப்பது நல்லது. பழைய மருத்துவப் பிரச்சனைகள் மீண்டும் வராமல் இருக்க வழக்கமான உடல் பரிசோதனைகளை செய்து கொள்ளுங்கள்.
மீனம்
கால்கள், பாதங்கள் தொடர்பான பிரச்சனைகள் ஏற்படும். தோல் சம்பந்தமான நோய்கள் தலை தூக்கலாம். மனரீதியாக ஒரு வித பயம் அல்லது குழப்பம் நிலவக்கூடும். நீர்ச்சத்து குறைபாடு ஏற்படலாம். இதயம் சார்ந்த பிரச்சனைகள் ஏற்படுவதற்கு வாய்ப்பு உண்டு.