முன்னோர்கள் கவனமாக எதிர்கொள்ள சொன்ன 6 கெட்ட சகுனங்கள்
நம்முடைய ஜோதிடத்தில் சகுனம் என்பது மிக முக்கியமானதாக கருதப்படுகிறது. அப்படியாக, சகுனங்கள் நம் வாழ்க்கைக்கு மிக நெருங்கிய தொடர்புகள் கொண்டது. அதாவது அவை நமக்கு ஒரு கெட்ட விஷயம் நடக்க இருப்பதை முன்னதாகவே உணர்த்தி கவனமாக இருக்க செய்கிறது. அதன் அடைப்படையில் நம் முன்னோர்கள் நாம் மிகவும் கவனமாக எதிர்கொள்ள சொன்ன 7 சகுனங்கள் பற்றி பார்ப்போம்.
1. நாம் வெளியே கிளம்பும் பொழுது கால் தடுமாறி கீழே விழும் சூழல் ஏற்பட்டாலோ, பொருட்கள் கை தவறி கீழே விழுந்தாலோ மிகவும் கவனமாக இருக்க வேண்டும். அவ்வாறு நிகழும் பொழுது, நாம் சற்று அமர்ந்து தண்ணீர் குடித்து விட்டு செல்ல வேண்டும் என்று பரிந்துரைக்கிறார்கள்.
2. நம் வீடுகளில் நன்றாக தண்ணீர் ஊற்றியும் காரணமே இல்லாமல் துளசி செடி காய்ந்து விடும். அவ்வாறு காய்ந்து போவது கெட்ட சகுனத்தை உணர்த்துகிறது. அந்த வேளையில் நாம் மனம் பதட்டம் அடையாமல், இறை வழிபாடு செய்வது அவசியம்.
3. நாம் மிகவும் கவனமாக கையாளக்கூடிய பொருட்களில் நெய் மற்றும் எண்ணெய் இடம்பெறும். இவை கை தவறி கீழே விழுவது மிக பெரிய துன்பம் வருவதை குறிக்கிறது. அதாவது, வாழ்க்கையில் முக்கிய முடிவுகள் எடுப்பதில் கவனமாக இருக்க சொல்லும் அறிகுறிகள் ஆகும்.
4. நாம் வீடுகளில் சுவாமிக்கு பூஜையின் வேளையில் கற்பூர தீப ஆராதனை காண்பிப்போம். அவ்வாறு காண்பிக்கும் வேளையில் கற்பூரம் ஒரு முறைக்கு மேல் அணைந்து விட்டால் அது கெட்ட சகுனத்தை உணர்த்துகிறது.
5. வீடுகளில் பல்லி நடமாட்டம் என்பது அதிர்ஷ்டமாக பார்க்க படுகிறது. அப்படியாக வீடுகளில் பல்லிகள் ஒன்றோடு ஒன்று சண்டையிட்டு கொண்டால் அது கெட்ட சகுனமாக பார்க்கப்படுகிறது.
6. நாம் வெளியே சென்று வரும் பொழுது பணம் அல்லது நாம் வைத்திருந்த பொருள் தொலைந்தாலே அவை நமக்கு வர இருக்கும் ஆபத்தை உணர்த்துகிறது. அதனால் சற்று செயல்களில் கவனம் கொண்டு செயல்பட்டால் ஆபத்துகளை தவிர்க்கலாம்.
ஆக, இவ்வாறான கெட்ட சகுனங்கள் நாம் சந்திக்கும் பொழுது, மனம் பதட்டம் கொள்ளாமல் இறைவனை மனதார நினைத்து வருகின்ற துன்பம், வந்து வழி தெரியாமல் போக வேண்டும் என்று வழிபாடு செய்து கொள்ள, துன்பத்தின் தாக்கம் குறைந்து அமைதி உண்டாகும்.
ஆன்மீகம்/ஜோதிடம் குறித்த தகவல்களை பெற IBC பக்தி வாட்ஸ் அப் குழுவில் இணைந்து கொள்ளுங்கள். |