மஹாலக்ஷ்மியின் அருளை பெற உதவும் 6 விஷயங்கள்
மஹாலக்ஷ்மி அம்சம் என்பது அமைதி,அழகு,பொறுமை,செல்வம் போன்ற அனைத்து விஷயங்களை குறிக்கும்.மேலும் இந்த விஷயங்கள் தான் மனிதன் வாழ்நாளில் சம்பாதிக்க வேண்டிய முக்கியமான அம்சம் ஆகும்.
அப்படியாக ஒரு மனிதன் வாழ்க்கை தொடங்குவது அவன் வீட்டில் இருந்து தான்.அந்த வீடு மஹாலக்ஷ்மி அம்சம் பொருந்தியதாக இருக்க நிச்சயம் அவர்களின் வாழ்க்கையும் சிறப்பாக அமையும்.அப்படியாக நாம் இப்பொழுது மஹாலக்ஷ்மியின் அருளை பெற வீட்டில் கடைபிடிக்க வேண்டிய முக்கியமான 6 விஷயங்களை பற்றி பார்ப்போம்.
1.இந்துக்கள் வீடுகளில் துளசி கடவுளாகவே பார்க்கப்படுகிறது.ஒருவர் வீட்டில் துளசி வளர்ப்பது அவர்களுக்கு நிதி நெருக்கடிகள் இல்லாமல் இருக்கும்.மேலும் அந்த துளசியை சரியான முறையில் பராமரிப்பதோடு துளசி செடி முன் விளக்கு ஏற்றி வழிபாடு செய்வது வீட்டில் நேர்மறை ஆற்றலை அதிகரிக்கும்.
2.வீடு என்பது நம்முடைய ஆரோக்கியத்தில் தொடங்கி சந்தோசம் என்று எல்லாவற்றிலும் பங்கு பெறுகிறது.அப்படியாக அந்த வீடு நமக்கு நிம்மதி கொடுக்க அதை நாம் சுத்தமாக வைத்திருப்பது மிக மிக அவசியம்.
வீட்டில் உடைந்து போன பொருட்கள் இருந்தால் அதை உடனியாக அப்புறப்படுத்துவது அவசியம்.அவரு உடைந்த பொருட்கள் கிழிந்த உடைகள் இருப்பதால் வீட்டில் எதிர்மறை ஆற்றல் உருவாகக்கூடும்.
3.வீட்டில் வாழை மரம் வளர்ப்பது சந்தோசம் கொடுக்கும்.மேலும் அந்த வாழை மரத்திற்கு வியாழக்கிழமை தோறும் விளக்கு ஏற்றி வழிபாடு செய்வது குடும்பத்தின் சந்தோஷத்திற்கும் நிம்மதிக்கும் வழிவகுக்கும்.
4.மிக முக்கியமாக வீட்டு பூஜை அறையை சுத்தமாக வைப்பதோடு அதில் தினமும் இறைவனுக்கு வைக்கும் தண்ணீரை மாற்றி விளக்கு ஏற்றி பூஜை செய்வதால் லக்ஷ்மிதேவியின் மனம் குளிர்ந்து வீட்டில் நிதி நெருக்கடிகள் உண்டாகாது.
5.வீடு எப்பொழுதும் வெளிச்சம் நிறைந்ததாக இருக்க வேண்டும்.இருள் சூழ விடக்கூடாது.ஆதலால் மாலை நேரங்களில் வீடுகள் இருட்டாக இல்லாமல் வீட்டில் தேவையான மின்சார விளக்குகள் போடுவது அவசியம்.
6.பெரும்பாலான வீடுகளில் கற்றாழை வளர்ப்பார்கள்.இல்லாதவர்கள் கட்டாயம் வீட்டில் கற்றாழை வளர்ப்பது அவசியம்.வீட்டில் கற்றாழை இருப்பதால் வீட்டில் உண்டாக்கும் தீய சக்திகளை விரட்டி நம்மை துன்பத்தில் இருந்து பாதுகாக்கும்.
சிலர் சொல்லுவதுண்டு நான் இவை எல்லாம் சரியான முறையில் செய்தாலும் எங்கள் கஷ்டம் தீரவில்லை.உண்மையில் இவை சரியான முறையில் செய்து இறைவனை மனதார வழிபாடு செய்வதால் தான் வரும் கஷ்டம் தீர வில்லை என்றாலும் உங்களுக்கு பெரிய அளவில் பாதிப்பு ஏற்பட்டு இருக்காது.
அதற்க்கு இறைவனின் அருட்பார்வை தேவை.ஆனால் ஒரு நாள் நிச்சயம் மஹாலஷ்மியின் அருளால் உங்கள் வாழ்க்கை மாறி துன்பம் விலகும்.
ஆன்மீகம்/ஜோதிடம் குறித்த தகவல்களை பெற IBC பக்தி வாட்ஸ் அப் குழுவில் இணைந்து கொள்ளுங்கள். |