மகாபாரதம்: நம் வாழ்க்கையை வழிநடத்தும் கிருஷ்ண பகவானின் 7 பொன்மொழிகள்

By Sakthi Raj May 28, 2026 05:35 AM GMT
Report

வாழ்க்கை என்பது பல இன்பம் துன்பம் நிறைந்தது. அதில் துன்பம் வரும் பொழுது அதை கையாள தெரியாமல் துவண்டு விடுகின்றோம். அப்படியாக, மகாபாரத்தில் கிருஷ்ண பகவான் நமக்கு வாழ்க்கையை மகிழ்ச்சியாக வாழ 8 பொன்மொழிகள் சொல்கிறார். அதை நாம் மனதில் பதித்துக் கொண்டாலே நம் வாழ்க்கையில் பாதி துன்பங்கள் விலகி விடுகிறது. அதை பற்றி பார்ப்போம்.

1. இந்த உலகத்தில் உண்மை எப்பொழுதும் கடினமானது. ஆக, உண்மையான பாதையில் நடப்பதும் கடினமானது தான். ஆனால் உண்மையில் அதுவே எப்பொழுதும் நிலையான வெற்றி வாகை சூட கூடியதாகவும் அமைகிறது.

2. எவன் ஒருவன் தர்மத்தை காப்பாற்றுகின்றானோ அவனை அந்த தர்மமே ஒரு நாள் காப்பாற்றும் என்பது இந்த உலகத்தில் அழிக்கப்படாத நியதி.

மகாபாரதம்: நம் வாழ்க்கையை வழிநடத்தும் கிருஷ்ண பகவானின் 7 பொன்மொழிகள் | 7 Life Lessons From Lord Krishna In Mahabharatam

தீராத துன்பம் என்று புலம்புபவர்களா? கிருஷ்ண பகவானின் இந்த அறிவுரை கேளுங்கள்

தீராத துன்பம் என்று புலம்புபவர்களா? கிருஷ்ண பகவானின் இந்த அறிவுரை கேளுங்கள்

3. மனிதர்களாகிய நமக்கு நமக்குரிய கடமையை செய்வது என்பது மட்டுமே உரிமை உண்டு. அதற்கான பலனை எதிர்பார்ப்பது தர்மமற்ற செயலாகும். ஆக யார் எப்படி வேண்டுமானாலும் செல்லட்டும், நாம் நம்முடைய கடமையை செய்வதில் தவறாமல் இருந்து விட்டால் பிரபஞ்சம் போற்றும் மனிதராக வாழ்ந்து விடலாம்.

4. இந்த உலகத்தில் ஒரு வேடிக்கையான விஷயம் உண்டு. எப்பொழுதுமே அநியாயம் முதலில் ஜெயிப்பது போல் தோன்றும். ஆனால், பொறுத்திருந்து பார்த்தால் இறுதியில் தர்மமே வெல்லும்.

5. மனிதன் அவன் உடலாலும் மனதாலும் வலிமை படைத்தவனாக இருந்தாலும் அறிவில்லாத வலிமை அவனுக்கு உதவுவதில்லை.

மகாபாரதம்: நம் வாழ்க்கையை வழிநடத்தும் கிருஷ்ண பகவானின் 7 பொன்மொழிகள் | 7 Life Lessons From Lord Krishna In Mahabharatam

12 வருட காலம் கஷ்டம் முடிவிற்கு வருகிறது.. குரு பெயர்ச்சியால் தலையெழுத்து மாறும் ராசிகள்

12 வருட காலம் கஷ்டம் முடிவிற்கு வருகிறது.. குரு பெயர்ச்சியால் தலையெழுத்து மாறும் ராசிகள்

6. நாம் எப்பொழுதும் எதற்கும் வருத்தப்பட தேவையில்லை. காலம் மாறிக்கொண்டே இருக்கிறது. காலம் மாறும் பொழுது நமக்கான வாழ்க்கையும் மாறும். பொறுமை காத்து விட்டால் எல்லாம் சரியாகும்.

7. எந்த சூழ்நிலையிலும் நன்மையை செய்வதற்கு நாம் தயங்குவதோ பின்வாங்குவதோ கூடாது. அது நமக்கு பெரிய இழப்புகளை கொடுக்கும்.  

ஆன்மீகம்/ஜோதிடம் குறித்த தகவல்களை பெற IBC பக்தி வாட்ஸ் அப் குழுவில் இணைந்து கொள்ளுங்கள்.


+91 44 6634 5009
Direct
+91 91500 40056
WhatsApp
bakthi@ibctamil.com
Email US