வெள்ளிக்கிழமை இந்த 7 பரிகாரம் செய்பவர்கள் வாழ்வில் இனி பண கஷ்டம் இல்லை

By Sakthi Raj Jan 09, 2026 09:10 AM GMT
Report

இந்து மதத்தில் ஒவ்வொரு தினமும் ஒவ்வொரு தெய்வங்களை வழிபாடு செய்வதற்கான உரிய தினமாக இருக்கிறது. அந்த வகையில் வெள்ளிக்கிழமை மகாலட்சுமியின் பரிபூரண அருளை பெறுவதற்கான நாளாக உள்ளது.

மேலும், வெள்ளிக்கிழமை சுக்கிர பகவானுக்கு உகந்த நாள். இந்த நாளில் நாம் செய்யக்கூடிய வழிபாடும் பரிகாரங்களும் நம்முடைய பொருளாதாரத்தில் சந்திக்கக்கூடிய பாதிப்புகளில் இருந்து நம்மை பாதுகாத்து அருளக்கூடியதாக இருக்கிறது.

அந்த வகையில் மகாலட்சுமியினுடைய பரிபூரண ஆசையை பெற்று நலமான வாழ்க்கை வாழ்வதற்கு வெள்ளிக்கிழமை அன்று செய்ய வேண்டிய முக்கியமான ஏழு பரிகாரங்களை பற்றி பார்ப்போம்.

வெள்ளிக்கிழமை இந்த 7 பரிகாரம் செய்பவர்கள் வாழ்வில் இனி பண கஷ்டம் இல்லை | 7 Remedies To Get Mahalakshmi Blessings On Friday

பரிகாரங்கள்:

1.வெள்ளிக்கிழமை அன்று காலையில் குளித்து வீடுகளை நறுமணமாக வைத்துக் கொள்ளுங்கள். சாம்பிராணி தூபம் போடுங்கள் அல்லது சந்தனம், ரோஜா, மல்லிகை கொண்ட வாசனை திரவியங்களை பயன்படுத்துங்கள். நல்ல நறுமணம் கொண்ட இடங்களில் மகாலட்சுமி வாசம் செய்வதால் அங்கு பிரச்சனைகள் அவ்வளவு எளிதாக வருவதில்லை.

2. பரிகாரங்களில் ஒரு மிகச் சிறந்த பரிகாரமாக தானம் செய்வது இருக்கிறது. அப்படியாக வெள்ளிக்கிழமைகளில் அரிசி பால் சர்க்கரை தயிர் அல்லது வெள்ளி இனிப்புகள் போன்ற வெள்ளை நிறங்களில் இருக்கக்கூடிய உணவுப் பொருட்களை நாம் ஏழை எளியவர்களுக்கு அல்லது கோவிலுக்கு தானம் செய்தால் நிச்சயம் சுக்கிர பகவான் மணமகிழ்ந்து நமக்கு பொருளாதார ரீதியாக சந்திக்க கூடிய கஷ்டங்களை குறைத்து அருள்வார்.

3. ஜாதகத்தில் சுக்கிர கிரகம் பலவீனமாக இருந்தால் சுபபோக வாழ்க்கையில் சில தடைகள் இருக்கும். ஆக சுசுக்கிரனின் தடை விலக வெள்ளிக்கிழமைகளில் சுத்தமான வெள்ளை நிற ஆடைகளை உடுத்துங்கள். இது உங்களுடைய மன நிலையில் ஒரு அமைதியை கொடுத்து நல்ல மாற்றம் கொடுக்கும்.

4. வெள்ளிக்கிழமை சுக்கிரனின் அசீர்வாதம் பெற மிகவும் உகந்த நாள். அதனால் அன்றைய நாள் "ஓம் ஷும் சுக்ராய நமஹ" என்ற மந்திரத்தை 108 முறை பாராயணம் செய்யுங்கள். இந்த மந்திரம் ஆனது உங்களுக்கு சுக்கிர பகவானுடைய பாதிப்புகளில் இருந்து ஒரு நல்ல விடுதலையை பெற்றுக் கொடுக்கும்.

வெள்ளிக்கிழமை இந்த 7 பரிகாரம் செய்பவர்கள் வாழ்வில் இனி பண கஷ்டம் இல்லை | 7 Remedies To Get Mahalakshmi Blessings On Friday

5. வீடுகளில் இருக்கக்கூடிய வறுமை விலக வெள்ளிக்கிழமைகளில் லட்சுமிதேவி படத்திற்கு முன்பாக நெய் தீபம் ஏற்றி வழிபாடு செய்யுங்கள். பிறகு லட்சுமி தேவிக்கு அரிசி பாயாசம் நெய்வேத்தியமாக படைத்து வழிபாடு செய்த பிறகு குடும்பத்தில் மற்றும் அக்கம் பக்கத்தில் இருக்கக்கூடிய பெண்கள் மற்றும் சிறுமிகளுக்கு பகிர்ந்து உண்ணுங்கள். இது வீடுகளில் இருக்கக்கூடிய வறுமையை போக்கும்.

6. ஜோதிடத்தில் சுக்கிரன் என்பது பெண்ணை குறிக்கக்கூடிய கிரகமாக இருக்கிறது. உங்களுக்கு ஜாதகத்தில் சுக்கிரன் பலவீனமாக இருந்தால் பெண்களால் நிறைய பாதிப்புகள் வரக்கூடும். இருப்பினும் அந்த தாக்கம் குறைய ஏழை எளிய பெண்களுக்கு நீங்கள் உதவி செய்வது அவசியமாகும்.

7. ஆபரணங்கள் என்று எடுத்துக் கொண்டால் வெள்ளி என்பது சுக்கிரன் மற்றும் சந்திர பகவானுடைய உலோகமாக கருதப்படுகிறது. ஆதலால் வெள்ளிக்கிழமைகளில் உங்கள் கட்டை விரலில் வெள்ளி மோதிரம் அணிவது அல்லது பணம் வைக்கக்கூடிய பைகளில் வெள்ளி நாணயத்தை வைப்பது மிகவும் மங்களகரமானதாக பார்க்கப்படுகிறது. இந்த பரிகாரம் வெற்றியையும் ஒரு நல்ல மன அமைதியை பெற்றுக் கொடுப்பதோடு நல்ல முன்னேற்றத்தையும் கொடுக்கும். 

ஆன்மீகம்/ஜோதிடம் குறித்த தகவல்களை பெற IBC பக்தி வாட்ஸ் அப் குழுவில் இணைந்து கொள்ளுங்கள்.


+91 44 6634 5009
Direct
+91 91500 40056
WhatsApp
bakthi@ibctamil.com
Email US