இந்த 7 பொருட்கள் வீட்டில் இருந்தால் போதும்-எதிர்மறை ஆற்றல் விலகிவிடும்
இந்து மத சாஸ்திரத்தில் வீட்டில் சில பொருட்களை வைத்திருப்பதால் நேர்மறை எண்ணங்கள் பெருகி வீட்டில் லட்சுமி கடாட்சம் உருவாகும் என்று சொல்கிறார்கள்.அப்படியாக லட்சுமி தேவியின் பார்வை நம் மீது எப்பொழுதும் இருக்க நாம் வீட்டில் வைக்க வேண்டிய முக்கியமான 7 பொருட்களை பற்றி பார்ப்போம்.
நம் வீடு எப்பொழுதும் சுத்தமாகவும் வாசனை பொருள் நிறைந்தவையாகவும் இருக்கவேண்டும்.அதாவது பச்சை கற்பூரம், ஏலக்காய், கிராம்பு போன்றவை எப்பொழுதும் குறையாமல் வீட்டில் வைப்பதிருப்பது சிறந்த பலனை தரும்.
குறிப்பாக ஏலக்காயை மாலையாகக் கட்டி பூஜையறையில் இருக்கும் மகாலக்ஷ்மி படத்திற்கு போடுவது வீடு வாசம் நிறைந்தவையாக இருக்கும் அதோடு மஹாலக்ஷ்மியின் அருள் நமக்கு எப்பொழுதும் கிடைக்கும்.
அதே போல் தினமும் விளக்கு ஏற்றும் பொழுது பச்சை கற்பூரத்தை நுணுக்கி சேர்த்து விளக்கை ஏற்றினால்,வீடு முழுவதும் நல்ல நறுமணம் கிடைப்பதோடு வீட்டில் தெய்விக ஆற்றல் பெருகும்.இந்த வரிசையில் கிராம்பும் நல்ல நறுமணம் தரக்கூடிய பொருள்.
இதையும் மாலையாகப் பயன்படுத்தலாம். விளக்கேற்றும்போது 1, 3, 5, 7, 9 என்ற ஒற்றைப்படையில் விளக்கில் போட்டு ஏற்றினால் மிகவும் விசேஷமாகக் கருதப்படுகிறது. மேலும்,கல் உப்பு மிக முக்கியமான பொருளாக கருதப்படுகிறது.
நாம் வீட்டில் உள்ள நபர்கள் வாரம் செவ்வாய்,வெள்ளிக்கிழமை குளிக்கும் பொழுது கைப்பிடி கல் உப்பை தண்ணீரில் கலந்து குளிக்க நமக்கு ஏற்பட்ட கண் திருஷ்டிகள்,மற்றும் நம்மை சுற்றி உள்ள எதிர்மறை எண்ணங்கள் முற்றிலுமாக விலகும்.
அதே போல் கல் உப்பு தீர்ந்து அதை வாங்க வேண்டும் என்றால் வெள்ளிக்கிழமை, செவ்வாய்க்கிழமை சுக்கிர ஓரையில் வாங்கினால் வீட்டில் ஐஸ்வர்யம் பெருகும். அதே போல் விரலி மஞ்சள் நாம் கல் உப்புடன் சேர்த்து வாங்குவது சிறந்த பலன்களை கொடுக்கும்.
இந்த இரண்டு பொருட்களையும் சேர்த்து வாங்கும் பொழுதுவீட்டில் செல்வ வளம் பெருகும்.மஹாலக்ஷ்மியின் பரிபூர்ண அருளை பெறமுடியும்.
அதே போல் பசும்பால் மிகமுக்கியமான ஒன்றாகும்.நாம் காய்ச்சிய பாலில் சிறிது சக்கரை சேர்த்து நெய்வேத்தியமாக படைத்து வழிபாடு செய்வது சிறந்த பலனை தரும்.
ஆன்மீகம்/ஜோதிடம் குறித்த தகவல்களை பெற IBC பக்தி வாட்ஸ் அப் குழுவில் இணைந்து கொள்ளுங்கள். |