வீட்டின் பூஜையறையில் செய்யக்கூடாத 8 தவறுகள்.., என்ன தெரியுமா?

By Yashini 21 days ago
Report

வீட்டின் பூஜையறையை அழகாகவும், சுத்தமாகவும் பராமரிப்பதன் மூலமாக லக்ஷ்மி கடாட்சம் நிறைந்திருக்கும்.

அந்தவகையில், சிறப்பு வாய்ந்த பூஜையறையில் செய்யக்கூடாத 8 தவறுகளை பற்றி பார்க்கலாம்.

செய்யக்கூடாத தவறுகள்

1. பூஜையறை எப்போதும் பளிச்சென்று வெளிச்சம் சூழ்ந்ததாக இருக்க வேண்டும்.

2. கையில் விளக்குகளை ஏந்தி ஆராதனை காட்டக் கூடாது. மேலும், வீட்டில் சாப்பிட வைத்திருக்கும் எச்சில் பாத்திரத்தில் சுவாமிக்கு நெய்வைத்தியம் வைக்கப் பயன்படுத்தக் கூடாது.

வீட்டின் பூஜையறையில் செய்யக்கூடாத 8 தவறுகள்.., என்ன தெரியுமா? | 8 Mistakes That Must Not Be Made In The Pooja Room  

3. சுவாமிக்கு அர்ச்சனை செய்யும்போது முழு மலர்களை மட்டுமே பயன்படுத்த வேண்டும். பூவின் இதழ்களைக் கொண்டு அர்ச்சனை செய்வது மிகவும் தவறாகும்.

4. வீட்டில் சுவாமி படத்துக்குப் போடப்பட்டு இருக்கும் பூவை காயும் வரை அப்படியே விட்டுவிடக் கூடாது. அதைப்போல பூ காய்வதற்கு முன்பாகவே எடுக்கவும் கூடாது.

5. சுவாமிக்கு படைக்கும்போது வெறும் வெற்றிலையை மட்டும் எக்காரணம் கொண்டும் வைக்கக் கூடாது. கட்டாயம் வெற்றிலையுடன், பாக்கு மற்றும் பூ இடம் பெற்றிருக்க வேண்டும்.

6. பூஜையறையில் விளக்கேற்றும்போது லக்ஷ்மி தேவி அதில் வந்து விடுகிறார். ஆகவே, திரியை தட்டிவிடும்போது அது அபசகுணமாக கருதப்படுகிறது.

7. பூஜையறையில் நின்றுக்கொண்டு எதிர்மறையான வார்த்தைகளைப் பேசுவதைத் தவிர்த்து விடுங்கள். நல்ல வார்த்தைகளை மட்டும் பேசவேண்டும்.

8. பூஜையறையில் விளக்கேற்றும்போது கட்டாயம் இரண்டு விளக்குகளை ஏற்றுங்கள்.         

  ஆன்மீகம்/ஜோதிடம் குறித்த தகவல்களை பெற IBC பக்தி வாட்ஸ் அப் குழுவில் இணைந்து கொள்ளுங்கள்.           

        

+91 44 6634 5009
Direct
+91 91500 40056
WhatsApp
bakthi@ibctamil.com
Email US