திரும்பிய திசை எல்லாம் கஷ்டமா? இந்த 8 பரிகாரங்களை உடனே செய்யுங்கள்

By Sakthi Raj Jun 29, 2026 08:59 AM GMT
Report

வாழ்க்கையில் கடின காலம் என்பது மனிதன் முதல் விலங்குகள் வரை வரக்கூடியது. அது நம்மை மென்மேலும் உயர்த்தக்கூடிய ஒரு அற்புத சக்தி என்றே சொல்லலாம். அப்படியாக, திரும்பிய திசை எல்லாம் கடினமான காலத்தில் இருப்பவர்கள் செய்ய வேண்டிய 8 முக்கிய பரிகாரங்களை பற்றி பார்ப்போம்.

1. திங்கட்கிழமையும் அமாவாசையும் சேர்ந்து வருகின்ற நாட்களில் அரச மரத்தை 108 முறை பிரதட்சணம் செய்வது மகா புண்ணியத்தை பெற்றுக் கொடுக்கும். இது நம் வாழ்க்கையில் எவ்வளவு பெரிய இன்னல்கள் இருந்தாலும் அதை அடியோடு அழித்துவிடும்.

2. தினமும் வீட்டில் அல்லது ஸ்ரீ லட்சுமி நரசிம்மருக்கு சனிக்கிழமைகளில் நெய் தீபம் ஏற்றி வழிபாடு செய்ய வாழ்க்கையில் உள்ள பண கஷ்டங்கள் விலகும்.

திரும்பிய திசை எல்லாம் கஷ்டமா? இந்த 8 பரிகாரங்களை உடனே செய்யுங்கள் | 8 Powerfull Hindu Remedies For Life Struggle

2, 11, 20, 29 இந்த தேதியில் பிறந்தவர்களா? உங்கள் வாழ்க்கை இப்படித்தான் இருக்குமாம்

2, 11, 20, 29 இந்த தேதியில் பிறந்தவர்களா? உங்கள் வாழ்க்கை இப்படித்தான் இருக்குமாம்

3. வியாபாரிகள் தங்களுடைய தொழில் நஷ்டத்தால் கடையை மூடும் அளவிற்கு செல்கிறது என்று வருந்தாமல் தினமும் கடையை மூடும் பொழுது சூடம் ஏற்ற வேண்டும். எலுமிச்சை பழம் வெட்டி குங்குமம் தடவி கடையைச் சுற்றி அதாவது கடையின் நான்கு திசைகளிலும் போட்டால் வியாபாரம் மீண்டும் செழிப்பாக வளரும்.

4. அதேபோல் புதன்கிழமை வியாழக்கிழமைகளில் அமிர்த யோகம் சித்தயோகம் காலங்களில் மாணவர்களை பள்ளியில் சேர்த்தால் மாணவர்கள் பள்ளியில் சிறந்து விளங்குவார்கள். எதிர்காலம் சிறப்பாக அமையும்.

5. முருகப்பெருமானை தினமும் முழு மனதோடு வழிபாடு செய்து அவருடைய மந்திரத்தை பாராயணம் செய்தால் சிறந்த வேலை கிடைக்கும்.

திரும்பிய திசை எல்லாம் கஷ்டமா? இந்த 8 பரிகாரங்களை உடனே செய்யுங்கள் | 8 Powerfull Hindu Remedies For Life Struggle

2026: இன்று ஆனி பௌர்ணமி.. வீடுகளில் என்ன செய்யலாம் ?என்ன செய்யக்கூடாது?

2026: இன்று ஆனி பௌர்ணமி.. வீடுகளில் என்ன செய்யலாம் ?என்ன செய்யக்கூடாது?

6. ஆறு தேய்பிறை அஷ்டமிகளில் சிவன் கோவிலில் உள்ள பைரவருக்கு சிவப்பு அரளி மலர்களால் அர்ச்சனை செய்து வழிபாடு செய்தால் விரைவில் குழந்தை பாக்கியம் உண்டு.

7. திரிசூலத்தில் குங்குமம் இட்டு எலுமிச்சை பழத்தை குத்தினால் எப்பேர்பட்ட கண் திருஷ்டியும் செய்வினைகளும் விலகும். 8. பிரதோஷ நாளில் நந்தி பகவானுக்கு பால், தயிர் வாங்கி அபிஷேகத்திற்கு கொடுத்து வரும் பொழுது விரைவில் திருமணம் நடக்கும். வீடுகளில் உள்ள தடைகள் யாவும் விலகும். 

 ஆன்மீகம்/ஜோதிடம் குறித்த தகவல்களை பெற IBC பக்தி வாட்ஸ் அப் குழுவில் இணைந்து கொள்ளுங்கள்.


+91 44 6634 5009
Direct
+91 91500 40056
WhatsApp
bakthi@ibctamil.com
Email US