ஆன்மிகம்: வீடுகளில் ஆண்கள் கட்டாயம் தவிர்க்க வேண்டிய 8 பழக்கங்கள்
நம்முடைய ஆன்மீக ரீதியாக குடும்பத்தில் இருக்கக்கூடிய ஆண்கள் ஒரு சில பழக்க வழக்கங்களை வீடுகளில் தவிர்க்க வேண்டும் என்று சொல்கிறார்கள். அதை பற்றி பார்ப்போம்.
1. ஆண்கள் ஒரு பொழுதும் விளக்கை ஊதி அணைக்க கூடாது.
2. அதேபோல், அவர்கள் வெள்ளி அமாவாசை நாட்களில் எண்ணெய் தேய்த்து குளிப்பதை தவிர்க்க வேண்டும்.
3. ஆண்கள் முடி வெட்டிய நாளில் எண்ணெய் தேய்த்து குளிப்பதை தவிர்க்க வேண்டும்.

4. ஆண்கள் ஒரு பொழுதும் வீடுகளில் கவிழ்ந்து படுத்துத் தூங்க கூடாது.
5. மனைவி கர்ப்பிணியாக இருக்கின்ற பொழுது ஆண்கள் கடலுக்கு சென்று குளிக்க கூடாது.
6. ஆண்கள் மயானம் சென்று வீடு திரும்பிய பொழுது உடனடியாக சுடு தண்ணீரில் குளிக்கக்கூடாது.
7. அதேபோல் முடிந்தவரை ஆண்கள் வீடுகளில் இரவு நகம் வெட்டுவதை தவிர்க்க வேண்டும்.
8. ஆண்கள் வெளியே சென்று வீடு திரும்பும் பொழுது காலியான கைகளால் வீட்டிற்கு வருவதை தவிர்க்க வேண்டும். முடிந்த அளவிற்கு ஒரு பழமாவது வாங்கிட்டு வருவது அவசியம்.
| ஆன்மீகம்/ஜோதிடம் குறித்த தகவல்களை பெற IBC பக்தி வாட்ஸ் அப் குழுவில் இணைந்து கொள்ளுங்கள். |