ஆடி மாதத்தின் மகிமைகளும் சிறப்புகளும்
தமிழ் மாதம் ஒவ்வொரு மாதமும் ஒவ்வொரு சிறப்புகள் இருக்கிறது.அதிலும் ஆடி மாதம் என்றால் மிகவும் விஷேசமாக கருதப்படுகிறது.அந்த மாதத்தில் நிறைய சிறப்பு வாய்ந்த திருவிழாக்கள் எல்லாம் கொண்டாடப்படுகிறது.
அந்த மாதத்தில் வரும் ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு சிறப்பு வாய்ந்த நாள். இந்த வருடம் ஆடி மாதம் வருகின்ற ஜூலை 17 புதன் அன்று பிறக்க உள்ளது.
தமிழ்நாடு முழுவதும் ஆடி பிறந்து வீட்லே அம்மன் கோயில்களில் எல்லாம் கொண்டாட்டமாக தான் இருக்கும்.
மேலும் ஆடி மாதத்தில் வரும் ஆடிப்பூரம், ஆடிப்பெருக்கு, ஆடி தபசு, ஆடிக்கிருத்திகை, ஆடி அமாவாசை என பல விசேஷங்கள் கொண்டாடப்பட உள்ளது.
ஆடி மாதத்தில் அம்மன் கோயில்களுக்கு சென்று வழிபட்டால் கஷ்டங்கள் நீங்கி நன்மைகள் பெருகும் என்பது பக்தர்கள் நம்பிக்கை .
ஆடி மாதத்தில் கோயில்களில் கூழ் ஊற்றுதல், அன்னதானம் உள்ளிட்ட பல விசேஷங்கள் தொடர்ந்து நடைபெற்று வரும்.
தமிழ்நாட்டில் தென் மாவட்டங்களை காட்டிலும் வட மாவட்டங்களில் ஆடி மாதம் மிகவும் கோலாகலமாக கொண்டாடப்படுகிறது.
குறிப்பாக, தமிழ்நாட்டின் தலைநகரமான சென்னையில் ஆடித் திருவிழா சிறப்பாக கொண்டாடப்படுவது வழக்கம், ஆடியின் ஒவ்வொரு வெள்ளிக்கிழமையும் கூழ் ஊற்றுதல், அன்னதானம் வழங்குதல் போன்ற நிகழ்வுகளை பக்தர்கள் மேற்கொள்வார்கள்.
ஆடி மாதத்தில் பக்தர்கள் விரதம் இருந்து நேர்த்திக்கடன் செலுத்துவார்கள் என்பதும் குறிப்பிடத்தக்கது.
ஆன்மீகம்/ஜோதிடம் குறித்த தகவல்களை பெற IBC பக்தி வாட்ஸ் அப் குழுவில் இணைந்து கொள்ளுங்கள் |